Pmk Against Knowledge City பாமக சார்பில்அறிவு சார் நகரத்திற்கு எதிர்ப்பு :துண்டு பிரசுர விழிப்புணர்வு பேரணி

Pmk Against Knowledge City பெரியபாளையம் அருகே அமைய உள்ள அறிவு சார் நகரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக கட்சி சார்பில் துண்டு பிரசுரம் மற்றும் இரு சக்கர பேரணி நடைபெற்றது.

Update: 2023-11-06 05:45 GMT

பெரியபாளையம் அருகே அறிவுசார் நகரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.

Pmk Against Knowledge City

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள வடமதுரை,கல்பட்டு, மாளந்தூர்,ஏனம்பாக்கம்,வெங்கல் உள்ளிட்ட ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதிகளை ஒன்றிணைத்து அறிவுசார் நகரமாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Pmk Against Knowledge City


பெரிய பாளையம் பகுதியில் அமைய உள்ள அறிவு சார் நகரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டூவீலரில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்ட பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். 

இதனால் விளை நிலங்கள் பாதிக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்று கூறப்படுகிறது.இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில்,பாட்டாளி மக்கள் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் வ.மு.பிரகாஷ் தலைமையில் தமிழக அரசை கண்டித்து மாளந்தூர்,ஆவாஜிப்பேட்டை, கல்பட்டு,ஏனம்பாக்கம், மேல்மாளிகைப்பட்டு, எர்ணாங்குப்பம்,வெங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அறிவு சார் நகரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்,இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார், இளைஞர் அணி தலைவர் அன்பு,நிர்வாகிகள் ஜெயபால்,பிரபா,மு.முருகன் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News