பூலித்தேவன் பிறந்த நாள் விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி ஆய்வு
Poolithevan -மாமன்னர் பூலித்தேவன் 306 வது பிறந்த நாள் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.;
பூலித்தேவர் அரண்மனையில் எஸ்பி ஆய்வு
Poolithevan -வருகின்ற ஒன்றாம் தேதி பூலித்தேவனின் 306-வது பிறந்தநாள் விழா தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவர் அரண்மனையில் கொண்டாடப்பட்ட உள்ளது. தற்போது கொரோனா பரவல் தடை சட்டம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் யாரும் வர அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் விழா நடைபெறும் நெற்கட்டும்செவலில் உள்ள மாமன்னர் புலித்தேவர் அரண்மனையை பார்வையிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உயரதிகாரிகள், வருவாய் துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2