தென்காசி விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரம் கனிமொழி பங்கேற்பு

Update: 2020-12-29 05:21 GMT

தென்காசி மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தை கனிமொழி எம்.பி., துவக்கி வைத்தார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் பிரச்சாரத்தை தற்போதே துவக்கி விட்டன. அந்த வகையில்,தென்காசி மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தை கனிமொழி எம்.பி., துவக்கி வைத்தார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தில் தென்காசி வடக்கு மாவட்டத்தில் கனிமொழி பிரச்சாரத்தை தொடங்கினார், கரிவலம்வந்தநல்லூர் வந்த அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் துரை தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தலைமை செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் அய்யாதுரைபாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, ஒன்றிய செயலாளர் சங்கர பாண்டியன், மற்றும் தேவதாஸ் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்

Tags: