தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியின் புதிய ஆணையராக ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடையநல்லூர் நகராட்சியின் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்ட ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து புதிய ஆணையர் ரவிச்சந்திரனுக்கு பொறியாளர் ஸ்டான்லி ஜெபசிங், இளநிலை பொறியாளர் முரளி, சுகாதார அலுவலர் நாராயணன், ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி, வருவாய் ஆய்வாளர் துரை குமாரசாமி, நகரமைப்பு அலுவலர் ஹாஜா மைதீன் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.