தென்காசி மாவட்டம் அகரக்கட்டு புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தென்காசி மாவட்டம் அகரக்கட்டு புனித அந்தோணியார் ஆலயத்தில் சாலைகளின் இருபுறங்களிலும் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்கு ஒளியுடன் கூடிய கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை எட்வின் ராஜ் கலந்துகொண்டு ஆராதனை செய்தார்.முன்னதாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பதன் நிகழ்ச்சி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் அகரகட்டு அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டுப் பிரார்த்தனை மற்றும் ஆராதனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஊர் நாட்டாமை அந்தோணி வியாகப்பண் கார்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்