தனியார் நிறுவனத்திற்கு கடத்த முயன்ற 1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் : அரசு அதிகாரிகள் சிக்க வாய்ப்பு ?
ஆலங்குளத்தில் பிரபல தனியார் நிறுவனத்திற்கு கடத்த முயன்ற சுமார் 1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அதிகாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிவேகத்தில் வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருந்தன. இதன் மொத்த எடை சுமார் 1500 கிலோ ஆகும். போலீசார் மினி லாரியில் சோதனை செய்யும் போது லாரி ஒட்டூநர் தப்பியோடினார். கடத்தி வரபட்ட ரேசன் அரிசி ஆலங்குளத்தில் உள்ள ரேசன் அரிசி கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்க வந்ததாக விசாரனையில் தெரிய வருகிறது.
இந்த ரேசன் அரிசியானது பிரபல முறுக்கு, ரெடிமெட் தோசை மாவு, கலர் கோல பொடி, கால்நடை தீவனம் தயாரிக்கும் கம்பெனி விநியோகம் செய்வதற்கு கொண்டு வர பட்ட போது ரேசன் அரிசி சிக்கியது இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர். விசாரணையில் தப்பியோடிய கடத்தல் கும்பலுடன் அரசு அதிகாரிகள் சிலர் சிக்க வாய்ப்பு உள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது