ஆலங்குளம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலி

Update: 2020-12-30 09:08 GMT

ஆலங்குளம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆலங்குளம் அருகே பாப்பான்குளத்தை சேர்ந்தவர் ராமன் மகன் சுப்புராஜ்(37). சொந்தமாக லாரி வைத்து டிரைவராக ஓடி வருகிறார். இந்த நிலையில் பாவூர்சத்திரத்தில் உள்ள மர அறுப்பு ஆலைக்கு மரத்தடி ஏற்றிகொண்டு தூத்துக்குடியில் இருந்து பாவூர்சத்திரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.சீதபற்பநல்லூர் தாண்டி சமத்துவபுரம் பகுதி அருகே சென்று கொண்டிக்கும் போது வண்டியின் இடது பக்கத்தில் சத்தம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த சுப்புராஜ் சாலையின் ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு வேலை பார்த்து கொண்டிருந்தாராம்.

அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று சுப்புராஜின் லாரியின் மீது பயங்கரமாக மோதியதில் பழுதை சரிபார்த்துகொண்டிருந்த சுப்புராஜ் லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த சுப்புராஜின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவரான ஆலங்குளம் அகரத்தை சேர்ந்த முப்புடாதி மகன் சுந்தர்(30) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: