பாவூர்சத்திரம் அருகே முறையான வடிகால் வசதி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கரிசலுர் கிராமத்தில் முறையான வடிகால் வசதி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;
தென்காசி மாவட்டம் பாவூர்ச்சத்திரம் அருகே உள்ளது பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து கரிசலுர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் ஊரின் நடுத் தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தொடந்து தேங்கி நிற்கிறது. தேங்கிய நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தி ஆகி டெங்கு மற்றும் மலேரியா காய்சல் அபாயம் உள்ளது. எனவே முறையான வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்