புல்வெளிகளில் படர்ந்த பனி பொதுமக்கள் ரசித்தனர்

Update: 2021-01-06 06:30 GMT

உதகை நகரில் முத்து போல் பனி நீர் விழுந்தது. இதை பொதுமக்கள் ரசித்து சென்றனர்.

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரை நீலகிரி மாவட்டத்தில் நீர் பனி மற்றும் உறைபனி தாக்கம் காணப்படும்.பெரும்பாலும் நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் திடீரென காலநிலை மாறி புல்வெளிகளில் நீர் பனி படர்ந்திருந்தது. இதை சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர்.

Tags: