கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக திறக்கப்படாமலிருந்த முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகம் கடந்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது . இதில் வாகன சவாரி , வளர்ப்பு யானை முகாம் மற்றும் யானை சவாரி என அனைத்தும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் புலிகள் காப்பகம் திறக்கப்பட்டு பத்து மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் வாகன சவாரி துவங்கியுள்ளது .முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சானிடைசர் வழங்கப்பட்டு முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .