வரும் நிதியாண்டில் இந்திய விமான சேவை நிறுவனங்களுக்கு 410 கோடி டாலர் இழப்பு ஏற்படும் -சிஏபிஏ முன்கணிப்பு
இந்தியாவில் விமான சேவை நிறுவனங்களுக்கு ரூ.30000 கோடி இழப்பு ஏற்படும் என சிஏபிஏ ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விமான சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நடப்பு நிதியாண்டில் சுமார் 30000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என சிஏபிஏ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதி ஆண்டைப் போலவே நடப்பு 2021-22 நிதியாண்டிலும் இந்திய விமானச் சேவை நிறுவனங்களுக்கு 410 கோடி டாலர் இழப்பு ஏற்படும் என முன்கணிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனா பேரிடரால் இரண்டு நிதியாண்டுகளில் மட்டும் அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் மொத்த இழப்பானது 800 கோடி டாலர் என்ற அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.