ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 53 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது- அமைச்சர் மா சுப்பிரமணியன்
ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 53 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது- அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 53 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது, இன்னும் 6 மாத காலத்தில் தடுப்பூசி போடாதவர்கள் இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாகும். பத்தாண்டு காலம் இல்லாத வகையில் மருத்துவர்கள் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் பெறும் வகையில் வெளிப்படையாக கலந்தாய்வு நடத்தி அவர்களுக்கு இட மாறுதல் அளிக்கப்பட்டு வருகிறது.
கூடங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு சேவைப் பிரிவு தொடங்கப்படும், அதுபோன்று ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகம் தென்காசி மாவட்டத்திற்கு சென்றுவிட்டதால் நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.