சிவகங்கை - நியாய விலை கடையில் மண்ணென்ணெய் வாங்க சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் கூட்டம் கொரோனா தொற்று பரவும் அபாயம்.
சிவகங்கை நியாய விலை கடையில் மண்ணென்ணெய் வாங்க சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் கூடியதால்கொரோனா தொற்றுபரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது,
சிவகங்கை மீனாட்சி நகர் நியாய விலை கடையில் இன்று பொதுமக்களுக்கு மண்ணென்ணெய் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மண்ணென்ணெயை வாங்க கூட்டம் அதிகமானதால் நியாயவிலைக் கடை ஊழியர் பொதுமக்களை சமூக இடைவெளி விட்டு நிற்குமாறு அறிவுறுத்த, அதனை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாமல் நியாய விலை கடை ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கொரானா காலத்தில் முறையாக பொருட்கள் வழங்கி சமூக இடைவெளியை காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.