தென்காசி சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது...
கூலி உயர்வு கேட்டு 44 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதில் தீர்வு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில்தான் பிரதான தொழிலாக உள்ளது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூலி உயர்வானது ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது வழக்கம்.
கடந்த மாதத்தோடு ஒப்பந்த அடிப்படையிலான இரண்டு வருடம் முடிந்த நிலையில் கடந்த 44 நாட்களாக 50% கூலி உயர்வு,அத்துடன் விடுப்பு சம்பளமும் வேண்டுமென்றும் கோரிக்கையாக முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 12 கட்ட பேச்சுவார்த்தை முடிந்து. இந்நிலையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி தொழிற்சங்க பிரதிநிதிகளும், விசைத்தறி தொழிலாளர்கள் நல மாவட்ட அலுவலர் ஆனந்தன், கோட்டாட்சியர் முருகசெல்வி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது
பேச்சுவார்த்தையில் 10%கூலி உயர்வு முடிவு செய்யப்பட்டது. 44 நாட்கள் நடந்த வேலைநிறுத்தத்தில் 18 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்ட போதிலும் தற்போது சிஐடியு தொழிற்சங்கத்தைத் தவிர 80 சதவீத தொழிலாளர்கள் உள்ள திருமுருகன் விசைத்தறியாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டதால் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனால் 44 நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.