ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கபட்ட பெண் பிறந்த குழந்தையுடன் தப்பியோட்டம்
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கபட்ட பெண் பிறந்த குழந்தையுடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது சபீர் இவருடைய மனைவி ஜீனத்(36) இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில் ஜீனத் கடந்த வாரம் பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மூன்று தினங்களுக்கு முன் ஜீனத்திற்கு குழந்தை பிறந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே ஜீனத்திற்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் இன்று அவருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு அவரை பிரசவ பிரிவிலிருந்து கொரோனா பிரிவிற்கு மாற்ற அழைத்து சென்ற போதுமருத்துவமனையிலிருந்து ஜீனத் கைக்குழந்தையுடன் தப்பி ஓடியுள்ளார் .
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்