தென்காசி மாவட்ட நரிக்குறவர்கள், திருநங்கைகள், தினசரி கூலி தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை தென்காசி காவல்துறையினர் வழங்கினர்.

Update: 2021-05-25 14:02 GMT

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கால் தினசரி கூலி தொழிலாளர்கள், நரிக்குறவர்கள், திருநங்கைகள், கிராமியக் கலைஞர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்வாதாரத்தை இழந்து தினசரி வாழ்வில் கழிக்க கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசியில் நரிக்குறவர்கள், திருநங்கைகள், கூலி தொழிலாளர்கள் என சுமார் 300 பேர் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தென்காசி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினர் தங்களது சொந்தப் பணம் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.


தற்போது தென்காசி நகரப்பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி காவல்நிலைய உதவி ஆய்வாளர் கற்பக ராஜா, தனிப்பிரிவு முதன்மை காவலர் முத்துராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி, மற்றும் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

Similar News