திருநெல்வேலியில்18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது
திருநெல்வேலியில்18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது
18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி திருநெல்வேலியில் துவங்கியது எட்டு மையங்களில் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது முதற்கட்டமாக வங்கி ஊழியர்கள் மத்திய மாநில அரசு ஊழியர்கள் உள்ளிட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது தேவையான அளவு கையிருப்பு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்
தமிழகத்தில் கொரானா பாதிப்பு 36 ஆயிரத்து கடந்துள்ள நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே வழி என மருத்துவர்கள் தெரிவிக்கும் நிலையில் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகிறது முதற்கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 45 வயதைக் கடந்தவர்கள் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் இருந்தபோதிலும் தமிழக அளவில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து சதவீத மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது இதனையடுத்து தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்தும் நோக்கில் 18 வயது முதல் 44 வயதுவரை உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்யும் வகையிலும் அதற்கான சிறப்பு முகாம்கள் துவங்கியது முதற்கட்டமாக வங்கி ஊழியர்கள் மத்திய மாநில அரசு ஊழியர்கள் உள்ளிட்ட நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்படுகிறது.
நெல்லை மாநகர பகுதிகளில் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அதிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் வங்கி ஊழியர்கள் மத்திய மாநில அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது மாநகர நல அலுவலர் சரோஜா தலைமையில் இந்த பணியை மாநகராட்சி மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டனர் ஒவ்வொரு முகாமிலும் குறைந்தபட்சம் 500 பேருக்கு தடுப்பூசி போடுவதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாலை 5 மணிவரை இந்த பணிகள் நடைபெறுகிறது மாவட்டத்தை பொருத்தவரை 20,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் தேவைக்கேற்ப அடுத்த சில நாட்களில் மேலும் 20,000 தடுப்பூசி கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் முன் களப்பணியாளர்கள் பொதுமக்களை நேரடியாக சந்திப்பவர்கள் என வங்கி ஊழியர்கள் மத்திய மாநில அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப் படுவது வரவேற்கத்தக்கது என்றாலும் முகாம்களுக்கு வரும் பொதுமக்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பலமணிநேரம் காவல் இருந்த பிறகு இறுதியாக வங்கி ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே போடப்படும் என தெரிவிக்கப்படும் இதனால் தாங்கள் காத்திருந்து ஏமாந்து திரும்பி செல்லக்கூடிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர் பொதுமக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் முகாம்களை அதிகப்படுத்தி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விரைவாக தடுப்பு ஊசியை செலுத்தி நோய் தாக்கத்தில் இருந்து காக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.