விருதுநகரில் புதிதாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட கோவிட்கேர் மையம் அமைக்க ஏற்பாடு

Update: 2021-05-25 10:12 GMT

விருதுநகரில் புதிதாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட கோவிட்கேர் மையம் அமைக்க ஏற்பாடு

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும்,தொற்று வந்தவர்களை தனிமைபடுத்தவும் மருத்துவமனைகள்,கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கோவிட்கேர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தற்பொழுது 5 ஆயிரத்து 712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பலர் வீட்டுத்தனிமையில் உள்ளனர். வீட்டுத்தனிமையில் உள்ளவர்களால் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு பரவாமல் இருக்கவும், தொற்று எண்ணிக்கை அதிகரிப்பை தடுக்கவும் கொரோனோ பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைகள் அல்லது கோவிட் கேர் மையத்தில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு தேவைப்படும் படுக்கைகளுக்கு முன்னெடுப்பாக மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள பள்ளி மைதானத்தில் ஆக்ஸிஜன் உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தற்காலிக கோவிட்கேர் மையம் அமைப்பதற்கான ஆய்வு பணியினை மேற்கொண்டனர்.

இன்னும் நாட்களில் இந்த மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அனைத்து வசதிகளுடன் கூடிய நல்ல காற்றோட்டமான மையமாக இது இருக்கும் என்றும் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், அப்போது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் கொரோனோ பரிசோதனையை தாமதிக்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். 

Similar News