பாண்டுரங்கர் கோயில் கும்பாபிஷேக விழா: சுவாமிகள் திருவீதி உலா

Swamis Tiruvedi Ula was held at Kumarapalayam Temple Kumbabhishekam

Update: 2022-06-18 15:30 GMT

குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற சுவாமி திருவீதி உலா

பாண்டுரங்கர் கோயில் கும்பாபிஷேக  விழாவை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது. குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விட்டோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழா, ராஜ மன்னார்குடி மணவாள மாமுனிகள் பீடம் 4வது பட்டம், செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதனையொட்டி பாண்டுரங்கர், விடோபா தாயார், மகாலட்சுமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, கருட வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.


Tags:    

Similar News