மாற்றுத்திறானாளிகளுக்கு நலஉதவி வழங்கல்

வேதாரண்யத்தில் மாற்றுத்திறானாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.;

Update: 2021-01-11 16:37 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் மாற்றுத்திறானாளிகள் நலத்துறை சார்பில் சமூக வலுவூட்டல் முகாம் நடைபெற்றது

இந்த முகாமில் 131 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 64 ஆயிரத்து 777 மதிப்பிலான உதவி உபகரணங்களை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags: