ரேஷன்கடையில் அதிமுக விளம்பரம் திமுக மறியல்

Update: 2021-01-04 10:45 GMT

சீர்காழி அருகே இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ரேஷன்கடை முன்பு விளம்பர பதாகை வைத்திருந்ததை அகற்றக்கோரி திமுகவினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தர்காஸ் கிராமத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல்பரிசு தொகை மற்றும் பொருட்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேசன்கடை வாசலில் அதிமுகவினர், தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இதனை கண்ட திமுகவினர் பேனரை உடனே அகற்ற வலியுறுத்தியும், அதிமுகவினரை கண்டித்தும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜெயபிராகஷ் தலைமையில் திமுகவினர் தர்காஸ் - சீர்காழி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுபட்டினம் காவல்துறையினர் பேனரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கலைந்து சென்றனர்.

Tags: