பைரவர் பூஜையில் மாஸ்க், கூலிங் கிளாஸ் அணிந்து அசத்திய நாயை அனைவரும் ரசித்தனர்.
மயிலாடுதுறை அடுத்த தருமபுர ஆதீனம் வன துர்க்கை அம்மன் ஆலயம் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், 108 பசுக்கள், 108 குதிரைகள், 18 காளை மாடுகள், 18 பைரவர்கள் (நாய்கள்) ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பைரவர் (நாய்) ஒன்று முகத்தில் மாஸ்க் அணிந்தும், கூலிங் கிளாஸ் அணிந்து வந்தது காண்போரை கவர்ந்தது.கரோனா வைரஸ் உருமாறி தீவிரமாக பரவி வரும் நிலையில் மனிதர்கள் கூட அலட்சியமாக மாஸ்க் அணியாமல் வெளியே வலம் வருகிறார்கள். ஆனால் நாய்க்கு மாஸ்க் அணிவித்தது பொதுமக்களிடையே மாஸ்க் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்பட்டுத்தியது.