தூய்மை பணியாளருக்கு குல்லா அணிவித்த செயல் அலுவலர்!

Update: 2021-01-01 05:30 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் பனியையும் பொருட்படுத்தாமல் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி அலுவலர் பனி குல்லாக்களை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி அலுவலர் குகன் தான் பொறுப்பேற்ற நாள் முதல் பேரூராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு விதமான புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றார்.இந்நிலையில் தற்போது பனிக்காலம் என்பதால் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடியற்காலையில் பனிப்பொழிவில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, பேரூராட்சியில் குப்பைகளை விற்று அதில் கிடைத்த வருமானத்தில் செயல் அலுவலர் குகன் பனி குல்லாவும், முக கவசம் வாங்கி அணிவித்தார்.தூய்மைப் பணியாளர்கள் மீது அக்கறைகொண்டு செயல்படும் செயல் அலுவலருக்கு தூய்மைப் பணியாளர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Tags: