மதுரையிலிருந்து வங்கதேசத்திற்கு டிராக்டர்கள் ஏற்றுமதி

Update: 2021-01-02 07:30 GMT

மதுரையிலிருந்து ரயில் மூலம் வங்கதேசத்திற்கு 25 சரக்கு பெட்டிகளில் 170க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஏற்றுமதி செய்து தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் சாதனை படைத்துள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே டாஃபே நிறுவனம் விவசாயிகளுக்கு பயன்படும் டிராக்டர்களைத் தயாரித்து வருகிறது. இங்கிருந்து 25 சரக்கு பெட்டிகளில் 170 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஏற்றப்பட்டு வங்காளதேசத்தில் உள்ள பேனாபோல் என்ற ரயில் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின் உத்தரவின் பேரில் கோட்ட வர்த்தக மேலாளர் கணேஷ் முதன்முறையாக வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் டிராக்டர்கள் ஏற்றும் பணிகளைத் துவக்கி வைத்தார்.

தென்னக ரயில்வே அளவில் முதல்முறையாக வெளிநாட்டிலுள்ள ரயில் நிலையத்திற்கு இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் தயாரிக்கப்பட்ட டிராக்டர், ரயில் மூலமாக அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags: