மதுரை : வழிப்பறியில் ஈடுபட்ட இரு சிறுவர்கள் கைது

Update: 2020-12-31 10:45 GMT

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் 59வது வார்டுக்குட்பட்ட எம்ஜிஆர் தெருவில் உள்ள கோழிப்பண்ணை சந்திப்பில் நேற்று மாலை 6 மணியளவில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வழிமறித்து அந்த பெண்ணிடமிருந்த பர்ஸ், ரூ. 2500 பணம், சுமார் 2 பவுன் செயினை பறித்துச் சென்றனர். இது குறித்து பொதுமக்கள் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அவனியாபுரம் போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காமிராவை ஆய்வு செய்து இதில் தொடர்புடைய கீரைத்துறை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், 17 வயது மதிக்கதக்க சிறுவன் என 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் இரண்டரை பவுன் தங்கம், 2500 ரூபாய் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags: