புத்தாண்டு தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது.
பொதுவாக புத்தாண்டு என்றாலே கன்னியாகுமரி மாவட்டம் களைகட்டும். புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காணவும், மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்கவும் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு படையெடுத்து வருவது வழக்கம்.அதன்படி வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறை, திருவள்ளுவர் சிலை, குமரி பகவதி அம்மன் கோவில், முக்கடல் சங்கமம் காந்தி நினைவு மண்டபம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு மாவட்டத்தில் உள்ள கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொது இடங்களில் புத்தாண்டை கொண்டாட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு உள்ள நிலையில் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இன்றி கன்னியாகுமரி வெறிச்சோடியது.