கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ளது புகழ் பெற்ற தோவாளை மலர் சந்தை. இங்கு கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் விளையும் மலர்கள் இந்த சந்தைக்கு கொண்டு வரப்பட்டு இங்கிருந்து தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் சிறப்பு சந்தை நடைபெற்றது,கடும் பனி பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததால் பூக்களின் விற்பனை கடுமையாக உயர்ந்து உள்ளது.அதன் படி ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை நான்காயிரம் ரூபாயாகவும் ஒரு கிலோ பிச்சிப்பூவின் விலை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயாகவும் காணப்படுகிறது.இதே போன்று ரோஜா, அரளி, ஜவ்வந்தி உள்ளிட்ட அனைத்து பூக்களின் விளையும் கடுமையாக உயர்ந்துள்ளது.