சுசீந்திரம் வந்த வேளிமலை குமாரசுவாமிக்கு வழிநெடுகிலும் வரவேற்பு

Update: 2020-12-23 10:45 GMT

சுசீந்திரம் வந்த வேளிமலை குமாரசுவாமிக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிகளில் சுசீந்திரம் அருள்மிகு தாணு மாலைய சுவாமி திருக்கோவிலிலும் ஒன்று.இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் மார்கழி மாத தேர் திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாட படுவது வழக்கம்.அந்தவகையில் இந்த ஆண்டிற்கான மார்கழி மாத தேர் திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாட்கள் விழாவில், மக்கள் மார் சந்திப்பு, சிறப்பு பூஜைகள், சுவாமி பல்லகில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.விழாவின் மூன்றாவது நாளான இன்று திருவிழாவில் கலந்து கொள்ள தக்கலை அருகே உள்ள வேளிமலை குமாரசுவாமி பல்லக்கில் வெள்ளி குதிரை வாகனத்தில் வருகை தந்தார்.அதன் படி அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.

Tags: