மாண்புமிகு தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைந்து உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 28 கோடி மதிப்பில் மருத்துவ பதிவுத் துறை மற்றும் கருத்தரங்க கூடம், 2 அறுவை சிகிச்சை அரங்குடன் 32 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ கட்டிடம், மருத்துவ மாணவ மாணவிகளுக்கான விடுதி உட்பட 6 கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்கின. முன்னதாக நடைபெற்ற பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் அதிமுக கழக மாநில அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.