நவீன ரோந்து வாகனம் காவல்துறையில் அறிமுகம்
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு, 360 டிகிரி கண்காணிக்கும் கழுகு கண்கள் போன்ற ரோந்து வாகனம் அறிமுகமாகியது.;
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் சுழலும் கேமராவுடம் அதிநவீன வசதிகளுடன் கூடிய வாகனம் பாதுகாப்பு பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
கழுகு கண்கள் என்றழைக்கப்படும் இந்த வாகனத்தில் உள்ள கேமரா 360 டிகிரி கண்காணிக்கும் வகையிலும் தொலைதூரத்தில் நடக்கும் சம்பவங்களை துல்லியமாக படம்பிடிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது. மொபைல் போன் மூலம் கேமராக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த வாகனம் மூலம் எந்த இடத்தில் காவல்துறை கண்காணிப்பு தேவையோ அந்த இடத்தில் தொலைதூரத்தில் இருந்தே கண்காணிக்க முடியும்.
இது தவிர இந்த வாகனத்தில் 4 கேமராக்கள் தனியாக அமைக்கப்பட்டு உள்ளன, கேமராக்கள் படம்பிடிக்கும் வீடியோக்கள் அனைத்தையும் 10 பேர் கொண்ட கண்காணிப்பு குழு ஒரே நேரத்தில் சரியாக பார்க்க முடியும் அளவிற்கு வாகனத்தின் உட்புறம் அமைக்கப்பட்டு உள்ளது.