புனித காணிக்கை அன்னை தேவாலய திருவிழா
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட சிறப்பு திருப்பலி மற்றும் ஜெபமாலை பேரணி.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் ஒன்றான குளச்சல் புனித காணிக்கை மாதா தேவாலய 5 ஆம் திருவிழாவை முன்னிட்டு இன்று குமரி நெல்லை மற்றும் கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட சிறப்பு திருப்பலி மற்றும் ஜெபமாலை பேரணி நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில நிர்வாகியுமான பச்சைமால் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி மற்றும் ஜெபமாலை பேரணியை தொடங்கி வைத்தார், அப்போது கிருஸ்தவர்கள் நலன் மற்றும் மீனவர்கள் நலனை தொடர்ந்து காத்து வரும் தமிழக அரசிற்கு பங்கு பெருமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது,
நிகழ்ச்சியில் பங்கு தந்தையர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பெண்கள், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர், பேரணியை முன்னிட்டு குளச்சல் பகுதியில் சில இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.