ஈரோடு மாவட்டத்தில் வரும் 7ம் தேதி 5 இடங்களில் ஆதார் சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் வரும் 7-ஆம் தேதி 5 இடங்களில் ஆதார் பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

Update: 2022-06-03 10:15 GMT

கோப்பு படம்

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் புதிய ஆதார் அட்டை பெற பதிவு செய்தல், திருத்தம் செய்யும் முகாம் வரும் ஜூன் 7-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு தொடங்கும் முகாமில் உரிய ஆவணங்களுடன் வந்து மக்கள் பயன் பெறலாம். கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு வைரவிழா மேல்நிலைப்பள்ளி, டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் அருகே தவுட்டுப்பாளையம் ஒன்றிய அலுவலகம், அம்மாபேட்டை ஒன்றிய அலுவலகம், தாமரைக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News