ஜூன் மாதம் திருமலை திருப்பதிக்கு போகணுமா? முதலில் இதனை படியுங்கள்

ஜூன் மாதம் திருமலை திருப்பதிக்கு தரிசனத்திற்காக செல்வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் இதனை படியுங்கள்

Update: 2024-03-19 11:47 GMT

திருமலை திருப்பதி.

திருப்பதி ஸ்ரீஏழுமலையான் கோவில் உலகின் பணக்கார கடவுளாக கருதப்படுகிறார். பூலோக வைகுண்டம் என்ற பெயரும் இதற்கு உண்டு. திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பமும், திருப்தியும் ஏற்படும் என்பதால் தான் நாள் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து திருமலைையே நாடி செல்கிறார்கள்.

பக்தர்களின் நலன் கருதியும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும்  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் மற்றும் கட்டண சேவைகளின் டிக்கெட் 3 மாதங்களுக்கு முன்னதாக ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதன்படி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் நடக்க இருக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோற்சவம் ,சகஸ்ர தீப அலங்காரம் ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் மார்ச் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுகின்றன. ஜூன் மாதம் 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடக்கும் ஜேஸ்டாபிசேகத்துக்கான டிக்கெட்டுகள் மார்ச் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஜூன் மாதம் நடக்க இருக்கும் கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை பிரமோற்சவம் சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளை வீட்டில் இருந்து மெய்நிகர் அடிப்படையில் வழிபட விரும்பும் பக்தர்கள் மார்ச் 21 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜூன் மாதத்துக்கான அங்க பிரதட்சன டோக்கன்கள் மார்ச் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் மற்றும் அறைகள் பதிவு மார்ச் 23ஆம் தேதி பகல் 11 மணிக்கும், 300 ரூபாய் தரிசன டிக்கெட் மார்ச் 25ஆம் தேதி காலை 10 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும்.


திருப்பதி திருமலையில் தேவஸ்தானத்தின் அறைகளில் ஜூன் மாதம் தங்குவதற்கு மார்ச் 25ஆம் தேதி மாலை 3 மணியிலிருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். தேவஸ்தானத்தின் ஸ்ரீ சேவா அமைப்பின் கீழ் தன்னார்வலர்களாக ஜூன் மாதம் பணியாற்ற விருப்பம் கொண்டவர்கள் மார்ச் 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கியும் நவநீத சேவா திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்ற விரும்புபவர்கள் 27ஆம் தேதி 12 மணிக்கு தொடங்கியும் காணிக்கை கணக்கிடும் பரக்காமணி சேவையில் தன்னார்வலர்களாக பணியாற்ற விரும்புவர்கள் 27ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கும் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News