தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் வராஹி அம்மன் சிலை பிரதிஷ்டை…

Varahi Amman Temple in Tirunelveli-தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட வராஹி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.;

Update: 2022-10-29 09:56 GMT

புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட  வராஹி அம்மன் சிலை.

Varahi Amman Temple in Tirunelveli

தமிழகத்தில் உள்ள பிரத்தியங்கிரா தேவி கோயில்களில் தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள கால பைரவர் மற்றும் பிரத்தியங்கிரா தேவி கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒரே கல்லில் 11 அடியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியங்கிரா தேவிக்கு மாதம் தோறும் அமாவாசை நாளில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர, தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய நாள்களில் சிறப்பு வத்தல் யாகம் நடத்தப்படுவது உண்டு. இந்த சிறப்பு யாகம் நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பங்தர்கள் பங்கேற்பது உண்டு.

மேலும், ஆண்டுதோறும் மிளகாய் வத்தல் யாகம், பாகற்காய் யாகம், எலுமிச்சை பழ யாகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகங்கள் இந்த கோயிலில் நடத்தப்படுவது உண்டு. இந்த கோயில் வளாகத்தில் ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், சனீஸ்வரர், வீரணார், ஆஞ்சநேயர், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

ஸ்ரீ சித்தர் பீடத்தில் கூடுதல் தற்போது வராஹி அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வாழ்வில் பிரச்னைகள் யாவற்றையும் தலைமுறைக்கும் போக்கி, கேட்ட வரம் அருளும் ஸ்ரீ வராஹி அம்மன் சிலை புதிதாக அமைக்கப்பட்ட நிலையில், அந்த சிலைக்கு ஸ்ரீ சித்தர் பீடத்தின் தலைமை நிர்வாகியான சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு யாக வழிபாடுகள் நடத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு பால், தயிர், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து வராஹி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க அம்மனுக்கு தீபாரதனை உள்ளிட்ட வழிபாடுகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகி சற்குரு சீனிவாச சித்தர் கூறியது வருமாறு:

வாராஹி அம்மனை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி, பஞ்சமி திதி நாட்களில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். வாராஹி அம்மனை மனமுருகி வழிபாடு செய்தால் குடும்பம் செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக பல தலைமுறைகளுக்கு தழைத்தோங்கும்.

வாராஹி அம்மனை 'ஓம் வாராஹி தேவியே துணை' என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் கஷ்டங்கள், எதிரி தொல்லை, கடன் தொல்லை, பணப்பிரச்னை உட்பட அனைத்து பிரச்னைகளும் தீரும் என்பது ஐதீகமாகும் என அவர் தெரிவித்தார்.

பிரதிஷ்டை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News