ஐயப்பன் கோயில் பாத்திரங்களை விற்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு

திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்களுக்கு சம்பளம் சபரிமலை கோயில் வருமானத்தில் இருந்து தான் கொடுக்கப்பட்டு வருகிறது.;

Update: 2021-07-18 04:06 GMT

சபரிமலை ஐயப்பன் கோயில்

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் 1,300 க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தபோதிலும் சபரிமலை ஐயப்பன் கோயில் மூலம்தான் முக்கிய வருமானம் கிடைக்கிறது. மண்டல, மகரவிளக்கு காலத்தில் மட்டும் 300 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்து வந்தது. இங்கிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் மற்ற கோயில்கள் அனைத்தும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்களுக்கு சம்பளம் கூட சபரிமலை கோயில் வருமானத்தில் இருந்து தான் கொடுக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், கொரோனா காரணமாக கடந்தாண்டு முதல் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருப்பதால் வருமானம் கடுமையாக குறைந்துள்ளது. தேவசம் போர்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை. இதனால், கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பாத்திரங்கள், பொருட்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சொந்தமாக உள்ள நகைகளை கணக்கெடுத்து அதை வங்கிகளில் அடகு வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News