Nalaya Rasi Palan பாத்து சூதானமா இருங்க.. இத மட்டும் தாண்டிட்டா அப்றம் ஜாலிதான்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன்

பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமை 12 ராசிகளுக்கும் உரிய அனைத்து பலன்களையும் தெரிந்துகொள்வோம் வாருங்கள். மகிழ்ச்சியுடன் தொடங்குவோம் இந்நாளை!;

Update: 2023-02-25 14:42 GMT

மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 14 ஆம் நாளுக்கான [ஆங்கில வருடத்தில் 26 பிப்ரவரி 2023, ஞாயிற்றுக் கிழமை] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்

காலை: 07.30 - 8.30 மணி வரை

மாலை: 03.30 - 4.30 மணி வரை

மேஷ ராசி பலன் 26 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Mesham


திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். வீண் செலவு வரும். உடல்நலத்தில் அதிக அக்கறை தேவை. நிதிநிலைமை சற்று கடினமாக உள்ளது. கடன் வாங்குவது, கொடுப்பதிலிருந்து தவிர்த்து இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண விஷயத்தில் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. அவதி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

மிதுன ராசி பலன் 26 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan மிதுனம் 


மிதுன ராசிக்காரர்களுக்கு, இன்று சிறப்பான நாள். புதிய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் மூலம் அனுகூலமான பயன்களைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவி அனுகூலமான பலன்களைத் தரும். உடன் பிறந்த சகோதரர்களிடம் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். அதிக வருமானம் கிடைக்கும். உடல் நலத்தில் ஆரோக்கியம் தேவை. உதவி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

கும்ப ராசி பலன் 26 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Kumbam


இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். அதிக வருமானம் ஈட்டுவீர்கள். இருப்பினும், சிக்கனமாகச் செலவு செய்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். புதிய நண்பர்களால் ஆதரவு பெருகும். பணியிடத்தில் போட்டி உண்டாகலாம். எதையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். போட்டி போட்டு செயல்பட்டு காரியத்தில் சாதிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

கடக ராசி பலன் 26 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Kadagam


இன்று சிறப்பான நாள். எல்லா வகையிலும் நன்மை உண்டான நாள். பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பது அவசியம். முன்னரே செய்த உதவி, உங்களுக்கு நன்மையைத் தரும் தினம். உங்களின் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கவனமாக பணியாற்ற வேண்டும். ஆரோக்கியத்தில் எந்த வித பாதிப்பும் இல்லை. நலம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

துலாம் ராசி பலன் 26 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Thulam


பணியில் பொறுப்புகள் அதிகம் இருக்கும். உங்களின் திறமையை கண்டு உயரதிகாரிகளிடமிருந்து பாராட்டு கிடைக்கும். உறவினர்களின் நல்லுறவை பேணிக் காப்பது. பண வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திறமைக்கேற்ற பலன்களை பெறுவீர்கள். தீவிர முயற்சியுடன் செயல்படுவது நல்லது. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிக ராசி பலன் 26 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan விருச்சிகம் 


பணிச்சுமை அதிகமாக இருக்கும். உயரதிகாரிடமிருந்து பிரச்சனை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. திடீர் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். உடல் அசதி ஏற்படும். அதிக அளவிலான ஓய்வு தேவைப்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. ஓய்வெடுங்கள். இன்று ஒருநாள் மட்டும் தாண்டிட்டா உங்களுக்கு அப்றம் பிரச்னையே இல்லை. முடிஞ்சா அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு போய்ட்டு வாங்க. பிரச்னையின் வீரியம் குறைய வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

தனுசு ராசி பலன் 26 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Dhanusu


உறுதியான முயற்சியுடன், கஷ்டமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். இன்று சாதகமான நாளாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். பணத்தைச் சேமிக்கும் சூழல் ஏற்படும். உடல்நலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி ராசி பலன் 26 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan கன்னி 


பணியில் கவனம் தேவை. உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும். பணியிடம் உங்களுக்குச் சாதகமாக இருக்காது. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். மனக்குழப்பம் நீங்க, பக்தி அதிகரிக்கும். பணிகளைத் திட்டமிட்டு, பணியாற்ற வேண்டும். குடும்பத்தாரிடம் வெளிப்படையாகப் பேச வேண்டும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

சிம்ம ராசி பலன் 26 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Simmam


பணியில் சக பணியாளர்களால் பிரச்சனை ஏற்படும். துணையுடன் நட்பாக நடந்து கொள்வது அவசியம். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பது இயலாததாகும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வேலையிடத்தில் அதிக பளு உண்டு. குறித்த நேரத்தில் முடிக்க இயலாததால், உயர் அதிகாரிகளிடம் பிரச்சனை ஏற்படலாம். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

மகர ராசி பலன் 26 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Magaram


குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களின் உதவியால், இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வேலையிடத்தில் பணிச்சுமை குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷப ராசி பலன் 26 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Rishabam


மன தைரியத்துடன் போராடி உயரிய சிந்தனை கொண்டவராகத் திகழ்வீர்கள். உங்களது சிந்தனைக்கேற்ற பலன் கிடைக்கும். நம்பிக்கை மேலோங்கி எல்லா விஷயத்திலும் முயன்று செயல்படுவீர்கள். முயற்சி செய்து செய்யும் செயலில் வெற்றி காணும் நாள் இந்நாள். அதிக வருமானம் ஈட்டும் தினமாக அமையும். முதலீடு செய்து அதில் லாபத்தை ஈட்டும் தினம். தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

மீன ராசி பலன் 26 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Meenamஇன்று உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் அல்லது சுப நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள் தேடி வரும். உடனிருப்பவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அதிக வருமானம் ஈட்டுவீர்கள். முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1

Tags:    

Similar News