nalaya rasi palan மனதில் நினைத்தது நிச்சயமாய் நடக்கும் நாள் | நாளைய ராசிபலன் 25 பிப்ரவரி 2023
நாளைய தினம் காலை முதல் இரவு வரை மகிழ்ச்சி கரமான நாளாக அமைய வாழ்த்துக்கள்!;
வருங்காலத்தை முன்பே கணித்து வைத்தால் நாம் நாளைக்கு என்ன நடக்கும் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப நாம் செயல்பட ஏதுவாக இருக்கும். அதுமட்டுமின்றி நமக்கு முன்னோர்கள் தந்த கொடையான பஞ்சாங்கத்தையும் ஜோதிடத்தையும் துணை கொண்ட நாளைய தினம் நம் ராசிக்கு எப்படி என முன்னெச்சரிக்கையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
நாளைய தினத்தின் அனுகூலங்களும் பலன்களும் நமக்கு முன்னாடியே தெரிந்துகொண்டால் அன்றைய தினம் நாம் செய்யவேண்டிய நல்ல காரியங்களை செய்து புண்ணியத்துக்கு புண்ணியமும் பலனுக்கு பலனும் பெற்று சிறப்பாக அந்த விசயத்தை செய்து முடிக்கலாம் என்கிறார் அருட்தந்தை ரிஷிகாந்த முனி அவர்கள்.
மங்களகரமான சுபகிருது வருடம், மாசி மாதம் 13 ஆம் தினத்துக்கான [ ஆங்கில ஆண்டில் 25 பிப்ரவரி 2023, சனிக்கிழமை] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் ஆகிய ராசிகளுக்கான பலன்கள் எப்படி இருக்கும் ராசிக்காரர்களின் நாளைய தினம் எப்படி அமையும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க. நாளைய தினம் காலை முதல் இரவு வரை மகிழ்ச்சி கரமான நாளாக அமைய வாழ்த்துக்கள்!
நல்ல நேரம்:
காலை: 07.30 - 08.30 வரை
மாலை: 04.30 - 05.30 வரை
1 மேஷ ராசி பலன் 25 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Mesham
சவால்கள் நிறைந்த நாள். பணியிடத்தில் சகஊழியர்களிடையே திறமையை நிரூபிக்க போட்டி போட்டு வேலை செய்வீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது சிறந்தது. சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும். குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும், முடிந்தவரை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சாந்தம்!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
2 துலாம் ராசி பலன் 25 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan துலாம்
நெருங்கிய நண்பர்களின் உதவியுடன், தொழிலில் லாபம் ஈட்டுவீர்கள். நிறைவேறாத ஆசைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற தொடங்கும். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான நாள். ஒருசிலருக்கு வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். சிலருக்கு குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். மேன்மை!
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட எண்: ௨
3 சிம்ம ராசி பலன் 25 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Simma
அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னாடி ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. அதிக பணிச்சுமை காரணமாக சோர்வாக உணர்வீர்கள். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். மாணவர்களுக்கு சிறப்பான நாள் அல்ல. நினைத்த காரியம் நிறைவேற தடை உண்டாகும். சில இடங்களில் சாமர்த்தியமான பேச்சு கைக்கொடுக்கும். நண்பர்களிடம் பேசும்போது அகந்தை பேச்சை தவிர்க்கவும். கண் சார்ந்த பிரச்சனை வரலாம். அசதி!
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
4 மிதுன ராசி பலன் 25 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Midhunam
புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு தாராளமாக கிடைக்கும். பணியிடத்தில் கொடுத்த வேலைகளை கனகச்சிதமாக முடிப்பீர்கள். நீங்க சாதாரணமாக பேசும் வார்த்தைக்கூட மற்றவரை காயப்படுத்தலாம். வார்த்தையில் கவனம். விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் திருமண வாழ்க்கை என்பதை உணரும் நாள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அதே வேளையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. லாபம்!
அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட எண்: 1
5 ரிஷப ராசி பலன் 25 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Rishabam
பணியிடத்தில் பனிச்சுமை காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். மேலதிகாரிகளுடன் சின்ன சலசலப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுபவமிகுந்தவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. சுபகாரியம் சம்பந்தமான விஷயங்களில் தடை ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படும். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை முக்கியம். குழப்பம்!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 9
6 கன்னி ராசி பலன் 25 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Kanni
சந்தோஷத்திற்கு பஞ்சம் இருக்காது. தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். புதிய பெண்களிடம் பேசும் போது மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் பேசவும். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவு வரும். பூர்வீக சொத்து விவகாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அதேபோல், வாகன பயணத்தின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். ஆர்வம்!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
7 கடக ராசி பலன் 25 பிப்ரவரி 2023 | Nalaya Rasi Palan Kadagam
பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணியிடத்தில் கொடுத்த பணியை சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்து மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு அரசியல் சார்ந்த நபர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். துணையுடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நன்மை!
அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்
அதிர்ஷ்ட எண்: 4