12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
12 ராசிகளுக்கான இன்றைய, ஜூலை 27 வியாழக்கிழமை ராசிபலன்கள் உங்களுக்காக;
27.7.2023, வியாழக்கிழமை இதன்று சந்திர பகவான் துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 11.14 மணி வரை நவமி. பின்னர் தசமி. இன்று இரவு 09.48 மணி வரை விசாகம். பின்னர் அனுஷம்.அஸ்வினி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷம்
வேலையில் ஏற்படும் அழுத்தம் இன்று சிறிது அழுத்தம் மற்றும் டென்சனை ஏற்படுத்தலாம். பணம் பண்ண புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். லட்சியங்களை நோக்கி அமைதியாக உழைத்திடுங்கள். வெற்றி பெறும் வரையில் உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள்.
ரிஷபம்
இன்று நீங்கள் ஆக்கப்பூர்வமாகவும் ஊக்கமாகவும் உணர்கிறீர்கள், நீங்கள் எதைச் செய்தாலும் - வழக்கத்தைவிட பாதி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் - எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள்.
மிதுனம்
வேலையில் ஏற்படும் அழுத்தம் இன்று சிறிது அழுத்தம் மற்றும் டென்சனை ஏற்படுத்தலாம். உங்களுக்காக பணத்தை சேமிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை இன்று முடிக்க முடியும். இன்று நீங்கள் சரியான முறையில் சேமிக்க முடியும். வேலையிடத்தில் ஒருவர் உங்கள் திட்டங்களை சிதைக்க முயற்சி செய்யலாம் - எனவே உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்காணித்திடுங்கள்..
கடகம்
அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும். மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும். இன்று பணம் குறித்து குடும்ப உறுப்பினர்களிடையே குழப்பம் இருக்கலாம்.
சிம்மம்
பலன் தரக் கூடிய நாள். நீண்ட நீடித்த நோய்க்கு இன்று நிவாரணம் காணலாம். கடின உழைப்பும் கடமை உணர்ச்சியும் உங்களுக்கு நம்பிக்கை மற்றும் ஆதரவை பெற்றுத் தரும்.
கன்னி
டென்சன்களும் கருத்து வேறுபாடுகளும் வெறுப்பையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். குடும்பத்தினர் தரும் நல்ல அறிவுரை இன்று உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தும். உங்கள் காதல் வாழ்க்கையின் இனிமையான நாளிது.
துலாம்
மன அமைதிக்காக டென்களை தீர்த்திடுங்கள். லட்சியங்களுக்காக முயற்சிக்க நல்ல நாள். சீக்கிரமே அவற்றை அடைவதற்காக சளைக்காமல் உழைக்க உடலுக்கு ரீசார்ஜ் செய்யுங்கள். நண்பர்களின் உதவியை நாடுங்கள். அது உங்கள் நன்னம்பிக்கையை ஊக்குவித்து, குறிக்கோள்களை அடைய உதவும்.
விருச்சிகம்
அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக மாற்றும்
தனுசு
மகிழ்ச்சி நிரம்பிய நல்ல நாள் சிறிய அளவிலான தொழில்களைச் செய்பவர்கள் இன்று அவர்களின் நெருக்கமான எந்தவொரு ஆலோசனையையும் பெறலாம், இது அவர்களுக்கு நிதி ரீதியாக பயனளிக்கும். உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும்
மகரம்
மற்றவர்களின் வெற்றிக்காக அவர்களைப் பாராட்டி அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். பணவரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டும் மகிழ்வீர்கள்.
கும்பம்
. இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள்.நிர்வாக திறமைக்கு பாராட்டு கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரும். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம்.
மீனம்
உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். இன்று பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் . குடும்பத்தினரின் தேவைகளில் கவனம் செலுத்துவதுதான் இன்றைக்கு உங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனமுடன் இருப்பது நல்லது.