12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
உங்கள் ராசிக்கு, இன்று எப்படி இருக்கும் என்று பார்ப்போமா? 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்காக;
மேஷம்
இன்று குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். சொத்து ஒப்பந்தங்கள் நிறைவேறி ஆதாயங்களைக் கொண்டு வரும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும்.
ரிஷபம்
இன்று அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. இன்று வியாபாரத்தில் லாபத்தைக் காணலாம். மாணவர்கள் நிதானமாக பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களால் அனுகூலம் உண்டாகும்
மிதுனம்
இன்று அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். உங்கள் மன உறுதிக்கு வெகுமதி கிடைக்கும். பொருளாதாரம் வலுப்பெற வாய்ப்புள்ளது மனதில் அமைதி பிறக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற எதையும் செய்ய தயங்க மாட்டீர்கள். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. கெட்ட கனவுகள் வரும்.
கடகம்
இன்று அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. பங்குதாரர் ஆதரவாகவும் உதவியாகவும் இருப்பார். பெற்றோர் உடல்நலம் பாதிக்கப்படலாம். ஆடம்பர செலவுகள் ஏற்படும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும்.
சிம்மம்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். உங்கள் கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருங்கள். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். தேவையான பண உதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம்.
கன்னி
இன்று சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் பயம் ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. நிலத்தில் முதலீடு செய்திருந்தால், அதை இன்று நல்ல விலையில் விற்கலாம், கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும்.
துலாம்
இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். சோகமும் மனச்சோர்வும் அண்ட விடாதீர்கள்.
விருச்சிகம்
இன்று மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் தள்ளிப் போடாமல் இருப்பது நல்லது விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனம் தேவை. மற்றவர்களிடம் பிரியமாக நடந்து கொள்வீர்கள். பெற்றோர்களிடம் கடுமையை காட்டாதீர்கள்
தனுசு
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று பொறுப்புகள் அதிகரிக்கும். நிதி நிலைமை இன்று வலுவாக இருக்கும். வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. சமூகப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள்
மகரம்
இன்று பண வரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தேவையில்லாத விஷயங்களுக்கு பணம் செலவழிக்க நேரிடும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும்.
கும்பம்
பணத்தை சேமிக்கும் எண்ணம் இன்று நிறைவேறும். இன்று புதிய ஆர்டர்கள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும்.
மீனம்
உங்கள் படைப்பாற்றல் வெளிப்படும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதேநேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும். அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். கிரகங்கள் இன்று அனுகூலமான இருப்பதால் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்