திருப்பதியில் இன்று பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது;

Update: 2023-09-25 03:45 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை கடந்த 22ம தேதி நடைபெற்றது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். பக்தர்கள் கற்பூரம் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து 6-வது நாளான நேற்று மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 7-ம் திருநாளான நேற்று ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்தார்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 'கோவிந்தா, கோவிந்தா' என கோஷமிட்டு பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். தேரில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் நான்கு மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தேரோட்டத்தையொட்டி திருப்பதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு தேவையான நீர், உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.

Tags:    

Similar News