திருப்பதி பிரம்மோற்சவம்- 8 நாட்களில் சுமார் ரூ.20 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் 8 நாட்களில் 5 லட்சத்து 68,735 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ரூ. 20 கோடி காணிக்கையாக செலுத்தினர்;
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் குறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவத்தில் 8 நாட்களில் 5 லட்சத்து 68,735 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கருட சேவையில் மட்டும் 81 ஆயிரத்து 318 பக்தர்கள் மூலவரையும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கருட சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் லட்டு வழங்குவதற்காக 9 லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் எட்டு நாட்களில் 24 லட்சத்து 89 ஆயிரத்து 481 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
எட்டு நாட்களில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக ரூ. 20 கோடியே 43 லட்சத்து 9400 செலுத்தினர். 20 லட்சத்து 99 ஆயிரம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கருட சேவை ஒரு நாள் மட்டும் 7 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் டீ காபி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு 3 லட்சத்து 47 ஆயிரத்து 226 பக்தர்களும் , திருமலையில் இருந்து திருப்பதிக்கு 4 லட்சத்து 47 ஆயிரத்து 969 பக்தர்கள் பயணம் செய்துள்ளனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி மூலம் 11 மணி நேரம் தினந்தோறும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஹைதராபாத்தில் 11 ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வெங்கடேஸ்வர வைபவ உற்சவம் நடத்தப்படும். தெலுங்கில் கார்த்திகை மாதத்தையொட்டி கார்த்திகை தீப உற்சவம் விசாகப்பட்டினம் மற்றும் கர்னூலில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
டிசம்பர் மாதம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் மற்றும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் வெங்கடேஸ்வர வைபவ உற்சவம் நடத்தப்படும். மும்பையில் விரைவில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணியும், சென்னையில் கட்டப்பட்டு வரும் பத்மாவதி தாயார் கோவில் மற்றும் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் கோவில்கள் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
அகமதாபாத்தில் குஜராத் மாநில அரசு கோவில் கட்ட ஐந்து ஏக்கர் நிலம் தர ஒப்புதல் வழங்கி உள்ளனர் எனவே விரைவில் அங்கு அதிகாரிகள் சென்று நிலம் கையகப்படுத்தி விரைவில் அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கப்படும். ஐரோப்பிய 11 நாடுகளில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்பட உள்ளது. பின்தங்கிய பகுதிகளிலும் சீனிவாசத்திற்கு கல்யாணம் நடத்துவதற்காக ஆந்திராவில் அனகாப்பள்ளி, ரம்பசோடவரம், அல்லூரிப்சீதாராமராஜு மாவட்டத்தில் பழங்குடியினர் மக்கள் தங்கும் பகுதிகளில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்பட உள்ளது என்று கூறினார்