திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதை ஜூலை 31 வரை மூடல்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைபாதை நாளை முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மூடப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-05-30 08:42 GMT

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி ஏழுமலையான் கோவில்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைபாதை ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மூடப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர் மேலும் பாதயாத்திரை செல்லும் பாதை அடைப்பு நடைபாதையில் பல இடங்களில் உள்ள மேற்கூறிய பழுதடைந்துள்ளது இதனை சீரமைத்து புனரமைக்கும் பணிகளை விரிவுபடுத்துவதற்காக ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை பாதயாத்திரை பாதை மூடப்படுகிறது.

இருப்பினும் மலைப்பாதையில் திருமலைக்கு செல்ல விருப்பம் உள்ள பக்தர்கள் சதுரகிரியில் உள்ள ஸ்ரீவாரி வெட்டு மலைப்பாதை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலிபிரியில் இருந்து ஸ்ரீவாரிமெட்டுக்கு செல்ல இலவச பேருந்து மூலம் பக்தர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News