சோழர் காலத்தில் கட்டப்பட்ட திருவிடைமருதுார்மகாலிங்கேஸ்வரர் கோயில் சிறப்பு என்ன தெரியுமா?
Thiruvidai Maruthur Temple History in Tamil தமிழகத்தில் சோழர்காலத்தில் கட்டப்பட்ட புகழ்வாய்ந்த திருக்கோயில்கள் இன்றளவும்அதன் பெருமைகளை பறைசாற்றி வருகின்றன.
thiruvidai maruthur temple history in tamil
திருவிடை மருதுார் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள நந்தி பகவான். (பைல்படம்)
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடை மருதுாரில் இக்கோயிலானது அமைந்துள்ளது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டதால் இன்றளவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கி வருகிறது.அப்பர்,சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகிய மூவரது தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாக இக்கோயிலானது விளங்குகிறது. தஞ்சையை சோழர்கள் ஆண்டதால் பெரும்பாலான கோவில்கள் அனைத்துமே காவிரி கரையை ஒட்டி அமைக்கப்பட்டது. அந்த வகையில் சோழர்களால் காவிரி தென்கரையில் அமைக்கப்பட்ட 30 வது திருத்தலமாக திருவிடைமருதுார் மகாலிங்கேஸ்வரர் கோயிலானது விளங்குகிறது. மேலும்இக்கோயிலில் மாணிக்க வாசகர், பட்டினத்தார் ஆகியோரும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயில் தல சிறப்பு
இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிவன்கோயில்கள் அமைந்துள்ளது. ஒவ்வொரு கோயிலுக்கும் தல மரம் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் மருத மரத்தினை தலவிருட்சமாக கொண்ட கோயில்கள் இந்தியாவில் மூன்று கோயில்கள் உள்ளன.தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதிருவிடை மருதுார் கோயில் மத்தியார்ஜூனம்எனப்படுகிறது.மேலும் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகேயுள்ள புடார்சுனம் எனப்படும் திருப்புடை மருதுார் கோயில். ஆந்திராவில் கர்நுாலில் உள்ள மல்லிகார்ஜூனம்கோயி்ல் இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் தலைமருது, இடைமருது, கடைமருது எனப் புகழ் பெறுகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள இத்திருத்தலமானது பாண்டிய நாட்டு அரசன் வரகுண பாண்டியனின் வாழ்க்கை முறையோடு ஒன்றியதாகும். ஒருமுறை இவ்வரசன் வேட்டையாட சென்றபோது இருட்டி விட்டதால் திரும்பும் வழியில் மன்னன் வந்த குதிரையின் காலில் மிதிபட்டு அந்தணன் ஒருவன் இறந்துவிட்டான்.இதனால் மன்னனுக்கு பிரமஹத்திதோஷம் பற்றிக்கொண்டது.மன்னன் வரகுண பாண்டியன் சிவபக்தன். அவனை இந்த தோஷத்தில் அந்தணனின் ஆவி பற்றிக்கொண்டதில் இருந்து தன்னை விடுவிக்க மதுரை சோமசுந்தரரை வரகுண பாண்டியன் வணங்கி கேட்டுக்கொண்டான். சோமசுந்தரக்கடவுளும் மன்னன் வரகுணபாண்டியனின் கனவில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடை மருதுாருக்கு சென்று தன்னை வணங்கும்படி சொன்னதாக ஐதீகம். திருவிடைமருதுார் எதிரிகளின் நாடான சோழ நாடு. அங்கு எப்படி வணங்குவது? என யோசித்திருந்த வேளையில் சோழமன்னன் பாண்டியநாட்டின் மீது படையெடுத்து வந்ததை அறிந்தான். போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச்சென்று திருவிடைமருதுார் கோயிலுக்குள் கிழக்கு கோபுரத்தின் வழியாகநுழைந்த போது வரகுணபான்டியனை பிடித்திருந்த அந்தணன் ஆவி மற்றும் பிரமஹத்தி தோஷங்களும் வெளியில் தங்கிவிட்டன. ஆனால் இவையிரண்டும் அவன் மீண்டும் இவ்வழியே வருவான் பற்றிக்கொள்ளலாம் என காத்திருந்த வேளையில் மன்னன் வரகுணபாண்டியன் மீண்டும் செல்லும் போது மேற்கு கோபுரத்தின் வழியாக அசரீரி ஒலித்ததால் வரகுணபாண்டியன் அதற்கு சம்மதம் தெரிவித்து அவ்வழியே சென்றதால் பிரமஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டான்.
இன்று இக்கோயிலுக்கு வரும் பக்த்ர்களும் இதேபோல் கிழக்கு வாயில் வழியாக நுழைந்து இறைவனை தரிசித்துவிட்டு பின்னர் மீண்டும் திரும்புகையில் மேற்கு வாயில் வழியாக செல்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர்.
திருவிடை மருதுார் கோயிலில் காணப்படும் லிங்கம் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். பகவான் மகாலிங்கேஸ்வரர் சுயமாக அர்ச்சித்துக்கொண்டு சப்தரிஷிகள் மற்றும் முனிவர்களுக்கு போதித்த திருத்தலம்தான் திருவிடை மருதுார் திருத்தலம். மார்க்கண்டேயன் என்ற முனிவர் மகாலிங்கேஸ்வரரிடம் விடுத்த வேண்டுகோள்படி அவருக்கு அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இறைவன் அக்காலத்திலேயே காட்சியளித்ததாக வரலாறு சொல்கிறது.
திருவிடை மருதுார் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள நந்தி பகவான். (பைல்படம்)
கர்நாடக மாநிலம் கொல்லுாரில் மூகாம்பிகை அம்மனுக்கு சன்னதி உள்ளது. அதேபோல் தமிழகத்தில் திருவிடைமருதுார் மகாலிங்கேஸ்வரரின் ஆலயத்திற்குள் அம்பாள் சந்நிதிக்கு தெற்குபுறம் மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. இது தமிழகத்தின் புகழ்பெற்ற அம்மன் சன்னதியாக கருதப்படுகிறது.திருவிடைமருதுார் மகாலிங்கேஸ்வரர் கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் சிவஸ்தலங்கள் உண்டு. இதனால் இதனை பஞ்சலிங்க ஸ்தலம் என்றும் அழைப்பர். இத்தலத்தின் தல விநாயகர் ஆண்ட விநாயகர் ஆவார்.
பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகிய திருத்தலம் திருவிடைமருதுார் திருத்தலம் ஆகும் என்பதால்இதனை பிரம்மஹத்தி தோஷ நிவாரண தலமாக பக்தர்கள் கருதுகின்றனர். மேலும் மகாலிங்கேஸ்வரர் சுயம்பு லிங்கமாக இங்கு பக்தர்களுக்கு காட்சியளித்து வருவதும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
பஞ்சலிங்க ஸ்தலத்தில் சுவாமியும் அம்பாளும் கிழக்கு நோக்கி வீற்றிருப்பதும் இத்தலத்திற்கு பெருமையாகும்.தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடைமருதுார் மகாலிங்கேஸ்வரர் கோயில் திருத்தேர் தமிழக கோயில்களிலேயே காணப்படும் மிகப்பெரிய மூன்றாவது தேராக கருதப்படுகிறது. இத்தலத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் அமைந்துள்ளன. பத்திரகிரியார், மற்றும் பட்டினத்தார் ஆகியோருக்கு கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல் பகுதிகளில் தனித்தனி சன்னிதிகள் உண்டு.திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுத்தலங்கள்மருத்துவக்குடி , திருபுவனம், இலந்துறை, திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர்,திருநீலக்குடி ஏனாதிமங்கலம், ஆகிய தலங்களாகும்
பழமையான கோயில்
இந்தியாவில் 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அதில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவிடைமருதுார் தலமும் ஒன்றாகும். இத்திருத்தலமானது சுமார் ஆயிரத்து இருநுாறு வருடங்களுக்கு மேல் பழமையான கோயிலாக கருதப்படுகிறது.
சிவன்கோயில்களில் மருதமரம் தல விருட்சமாக கருதப்படும் மூன்று கோயில்கள் காணப்படுகிறது. வடக்கே ஸ்ரீ சைலத்தினை வடமருதுார் என்றும், தெற்கே புடார்ச்சுனம் எனஅழைக்கப்படும் திருப்புடைமருதுார் உள்ளது.
இவ்விரண்டு கோயில்களுக்கும்இடையே கும்பகோணம்அருகேயுள்ள திருவிடைமருதுார்மகாலிங்கேஸ்வரர் ஆலயம் மத்யார்ஜூனம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு கோயிலானது பிரசித்தி பெறுகிறது எதனால் தெரியுமா? அக்கோயி்லின் தலம், தீர்த்தம் மற்றும் மூர்த்தியினால்தான் சிறப்பு பெறுகிறது. அந்த வகையில் திருவிடைமருதுார் கோயிலின் சிறப்புகள் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.
மேலும் இத்திருத்தலமானது பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுவது விசேஷ சிறப்பு. தேர்செல்லும் நான்கு மாட வீதிகளிலும் விஸ்வநாதர், ஆத்ம நாதர், ரிஷிபுரீஸ்வரர், மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நடுவே மஹாலிங்கேஸ்வரர் வீற்றிருப்பது பெருமை.
நாட்டில் மழையே இல்லை. வறட்சிதான் நிலவுகிறது என்ற சூழ்நிலையில் சொக்கநாதரை தரிசித்து அதற்கான சிறப்புபூஜைகளை மேற்கொண்டு மேகராக குறிஞ்சிபண்களில் அமைந்த தேவார பதிகங்களை பாடி பாராயணம் செய்தால் வருணபகவான் அருள்புரிந்து மழைகொட்டுவது என்பது இன்றளவி்லும் இத்திருத்தலத்தில் நடந்து வரும் அதிசயம் ஆகும்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு வழிபட செல்வோர் அதற்கு முன்னதாக திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம், திருவிடைமருதுார், ஆகிய பஞ்சகுரோசத்தலங்களுக்கு சென்று விதிப்படி குளித்து தரிசித்த பின்னர் ஒவ்வொரு பகலும் தங்கி வழிபட்ட பின்னர்தான் கும்பமேஸ்வரர் கோயிலுக்கு செல்லவேண்டும். இத்திருத்தலங்கள் அமைந்தது கும்பகோணத்திற்கே சிறப்பு ஆகும்.
உமா தேவியார், விநாயகர், முருகன், திருமால், லட்சுமி, காளி, சரஸ்வதி, வேதங்கள், வசிட்டர், உரோமச முனிவர், ஐராவணம், அகத்தியர், சிவவாக்கியர், கபிலர், வரகுண பாண்டியன் ஆகியோர் வழிபட்ட தலம் என்பதும் இதற்கு கூடுதல் சிறப்பு. கும்பகோணத்தில் இருந்து 9 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கடந்த 2016 ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ந்தேதியன்று 180 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஒரு விநோதம் இத்திருக்கோயிலில் நடந்தது. அதாவது பஞ்ச ரத தேரோட்டம் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர், தேவியோடு மகாலிங்கஸ்வாமி ஆகியோர் ஐந்து தேர்களில் திருவீதிஉலா வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
பாவை விளக்கு
தஞ்சாவூரில் அம்முனு அம்மணி விரும்பிஎன்ற பெண் பிரார்த்தனைக்காக லட்சத் தீபம் ஏற்றி, அவற்றுள் ஒரு விளக்காக தன்னுடைய உருவத்தையே பாவை விளக்காக்கித் தன்னுடைய சிற்பமே தீபம் ஏந்தும் அளவு செய்தாள். 120 செ.மீ. உயரமுள்ள, பித்தளையால் ஆன இந்த பாவை விளக்கு அழகிய பீடத்தின் மீது உள்ளது. நின்ற நிலையில் அம்முனு அம்மணி தன் இரு கரங்களாலும் விளக்கினை ஏந்தியுள்ளார். அவருடைய தோளில் கிளி ஒன்று உள்ளது. இதன் பீடத்தில் அம்முனு அம்மணியின் காதல் காவியம் தமிழ்ப் பொறிப்புகளாக இடம் பெற்றுள்ளது. ஒரு மன்னரின் மனைவியே தீபம் ஏந்திய பாவை விளக்காக இன்றும் நிற்பது வரலாற்றுச் சிறப்புடைய நிகழ்வாக கருதப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2