Star Matching Table- திருமண வாழ்க்கை சுகமாக அமைய நட்சத்திர பொருத்த அட்டவணை பற்றி தெரிஞ்சுக்குங்க...
Star Matching Table- நட்சத்திர பொருத்தம் என்பது, திருமண வாழ்க்கையில் மிக முக்கியமானது. எனவே, அனைவருமே இதுபற்றி தெரிந்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
Star Matching Table - நட்சத்திரம் பொருந்தும் அட்டவணை
முதலில் நட்சத்திரம் பொருந்தினாலே மற்றவை பொருந்தி விடும். முதலில் பெண் நட்சத்திரம் எதுவென்று அறிந்தபின், அந்த நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் எத்தனையாவது நட்சத்திரம் என அறியவேண்டும். அவ்விதம் பார்க்கையில் பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் இரட்டைப் படையாக வந்தால், அதாவது பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம், 2 ஆவது, 4 ஆவது, 6 ஆவது. 8 ஆவது நட்சத்திரமானால், (2, 4, 6, 8) பொருத்தம் உண்டு.
9 ஆம் எண் வந்தால் மற்றப் பொருத்தங்களைப் பார்த்தே சொல்ல வேண்டும். பெண் நட்சத்திரம் முதல் 2, 11, 20, 4, 13, 22, 6, 15, 24, 8, 17, 26 ஆகிய விரிவு எண்களும் பொருந்தும், 22 ஆம் எண் யோசித்துச் செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக, அசுபதிக்குத் திருவோணம், பரணிக்கு அவிட்டம், கார்த்திகைக்குச் சதயம் என்று எண்ணிப்பார்த்தால் 22 ஆவது நட்சத்திரமாக வரும். இதைத் தவிர்ப்பது நல்லது.
பெண் நட்சத்திரத்திற்கு 1, 3, 5, 7 ஆகிய நட்சத்திரங்கள் சேராது. அதன் விரிவு 1, 10, 19, 3, 12, 21, 5, 14, 23, 7, 16, 25 நட்சத்திரங்கள் சேராது. ஆனால், 7 மற்றும் 25 ஆம் எண் மகேந்திரப் பொருத்தத்தைக் காட்டுவதால் சில இடங்களில் சேரும்.
சுருங்கச் சொன்னால் பெண் நட்சத்திரமும், ஆண் நட்சத்திரமும் இரட்டைப் படையானால் (2.4.6. 8) சேரும் ஒற்றைப் படையானால் (1.3. 5) சேராது. இந்த முதல் படியில் 9 ஆம் எண் (9, 18, 27) ஆகிய நட்சத்திரங்களைச் சிறப்புப் பார்வை கொண்டு பார்க்க வேண்டும். பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் 9 இல் வந்தால் சேரும் என்று அவசரப்பட்டுவிடக் கூடாது. கேட்டைக்கு உத்திரட்டாதி 9 ஆம் எண். ஆனால் பெரும்பாலான கேட்டை-உத்திரட்டாதி தம்பதிகள் சுகமாய் இருப்பதில்லை.
தினப் பொருத்தம் தினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்பார்கள். ஆண் பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சான்றோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆயிரம் காலத்துப் பயிர் எனப்படும் திருமண வாழ்வு சிறக்க முன்னோர்கள் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தனர். பணப்பொருத்தம் பார்ப்பதை விட மனப்பொருத்தமும், மண் பொருத்தமும், மங்கல நாண் சூட நட்சத்திரப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்று கண்டறிந்தனர். வாழ்பவனுக்கு நட்சத்திரம் என்று கண்டறிந்தனர்.
நம்பிக்கையூட்டும் நட்சத்திரப் பொருத்தங்கள் வாயிலாக நாம் வரனைத் தேர்ந்தெடுக்கலாம். திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும் போது ஜோதிடர்கள் முதலில் பார்ப்பது நட்சத்திரப் பொருத்தத்தை தான். திருமணத்திற்குத் தயாராக இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட சில பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அதன்படி, ஆண்களுக்குப் பொருந்தும் பெண் நட்சத்திரங்கள் இங்கே தனித்தனியாக அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.
திருமணம் நடத்துவதற்குரிய சுலபமான காலகட்டமாகிய குருபலம் உள்ள கால அளவுகளையும் தெரிவித்துள்ளனர்.ஆண்களுக்கு ஒற்றைப்படை வயதுகளிலும், பெண்களுக்கு இரட்டைப்படை வயதுகளிலும் திருமணம் நடத்துவது சிறப்பாக பலன் தரும் என்று ஆலோசனை வழங்கி உள்ளனர். ஜாதகமோ - ஜாதகப்படி தங்கள் நட்சத்திரம் - ராசியோ தெரியாதிருப்பவர்களுக்கும் அவரவர் பெயரைக்கொண்டே பெயர் ராசி நட்சத்திரம் தெரிந்து கொள்ளவும் அதன்படி திருமணப் பொருத்தம் பார்த்துக் கொள்ளும் வழி வகுத்துள்ளனர். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் எவ்வாறான வழிகளில் நிவர்த்தியடைந்து திருமண நல்வாழ்வுக்கு அமைகின்றன என்பதையும் வழிகாட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆயிரம் காலத்து பயிர். பத்துப்பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைப்பார்கள். எந்த நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் சரியாக வரும் என்பதை பார்ப்பது முக்கியம். நட்சத்திர பொருத்தம் அட்டவணையை வைத்து பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் எவை என்பதை அறிய முடியும். நட்சத்திரங்கள் மொத்தம் 27. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களைக் கொண்டவை. பாதம் வாரியாக ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் எவை என்று பார்க்கலாம்.
அஸ்வினி – பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம் உத்தமம்
பரணி – ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வினி
கார்த்திகை – 1 ம் பாதம் சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் – அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
ரோகிணி – மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் – புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் – திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
திருவாதிரை – பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் – பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
புனர்பூசம் 4 ம் பாதம் – பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
பூசம் – உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4 உத்தமம் 12 ஆயில்யம் அஸ்தம், அனுஷம், பூசம்
மகம் – சித்திரை, அவிட்டம் 3, 4
பூரம் – உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
உத்திரம் 1 ம் பாதம் – பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் – பூராடம், திருவோணம், ரேவதி
அஸ்தம் – உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
சித்திரை 1, 2 ம் பாதங்கள் – விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
சித்திரை 3, 4 ம் பாதங்கள் – விசாகம்,திருவோணம், சதயம், ஆயில்யம்
சுவாதி – அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் – சதயம், ஆயில்யம்
விசாகம் 4 ம் பாதம் – சதயம்
அனுஷம் – உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
கேட்டை – திருவோணம், அனுஷம்
மூலம் – அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
பூராடம் – உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
உத்திராடம் 1 ம் பாதம் – பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் – பரணி, மிருகசீரிஷம் 1, 2
திருவோணம் – உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் – புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் – சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4 ஆம் பாதம்
சதயம் – கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4 பாதங்கள்
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் – உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
பூரட்டாதி 4 ம் பாதம் – உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
உத்திரட்டாதி – ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
ரேவதி – பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி