நட்சத்திர பொருத்தம் பாருங்க! நன்றாக வாழுங்க
Natchathira Porutham For Marriage in Tamil-திருமண பொருத்தம் பார்ப்பது. எந்தவொரு திருமண செயல்முறைக்கும் இது மிகவும் முக்கியமானது. ஆரம்பம் முதலே சரியாகச் செய்யும் எந்த ஒரு காரியமும் வெற்றியைத் தேடித்தரும்;
Natchathira Porutham For Marriage in Tamil
நமது சமூகம் திருமணம் நிகழ்விற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இது திருமணம் மூலம் இரண்டு நபர்களை ஒன்றிணைப்பது மட்டுமல்ல, இரண்டு குடும்பங்கள் ஒன்றிணைவதைக் கருதுகிறது.
எனவே, இந்த செயல்முறையின் முதல் படி, திருமண பொருத்தம் பார்ப்பது. எந்தவொரு திருமண செயல்முறைக்கும் இது மிகவும் முக்கியமானது. ஆரம்பம் முதலே சரியாகச் செய்யும் எந்த ஒரு காரியமும் வெற்றியைத் தேடித்தரும்,
ஜோதிட சாஸ்திரத்தின் படி திருமண பொருத்தம் என்பது திருமணத்தின் முக்கிய அம்சம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு அம்சங்கள். திருமண பொருத்தம் என்பது ஆண் மற்றும் பெண்ணின் பிறந்த நட்சத்திரம் (ஜென்ம நட்சத்திரம்) மற்றும் ஜென்ம ராசியை ஒப்பிடுவதை உள்ளடக்கியது
அவர்களின் இணக்கத்தன்மையின் அளவைக் கண்டறிந்து அவர்களின் மகிழ்ச்சியான மற்றும் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது. இன்னும் விரிவாக திருமண பொருத்தம் பார்க்க, ஜாதகப் பொருத்தம் மிகவும் துல்லியமானது. திருமண பொருத்தத்தில் மொத்தம் பத்து கூறுகள் உள்ளன. பொருத்தங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அவற்றின் பொருந்தக்கூடிய தன்மை சிறந்தது. போட்டி நன்றாக கருதப்படுகிறது. பொருத்தம் (பொருத்தம்) நிலைகளின் அடிப்படையில் பொருந்தக்கூடிய நிலைகள் உத்தமம், மத்யம் மற்றும் அதமம் என கூறப்படுகின்றன.
பொதுவாக திருமண பொருத்தம் பார்ப்பது என்பது பெண் நட்சத்திரம் வைத்தே பார்க்க வேண்டும்.ஏனென்றால் பெண்தான் தான் பிறந்த இடத்தை விட்டுசென்று வாழ்கிறாள். அதனால் கீழ்வரும் நட்சத்திர பொருத்தம் அட்டவணையில் பெண் நட்சத்திரம் முதலில் கொடுத்து அதற்கு எத்தனை ஆண் நட்சந்திரங்கள் உத்தமம் மற்றும் மத்திமம் என்று குறிப்பிட்டுள்ளோம்
பெண் நட்சத்திரம் – அசுவனி
உத்தம ஆண் நட்சந்திரங்கள்
பரணி, திருவாதிரை, பூசம், அனுஷம், பூராடம், திருவோணம், சதயம் , உத்திரட்டாதி,
மத்திம ஆண் நட்சந்திரங்கள்
கார்த்திகை 1, ரோகிணி, மிருகசீரிடம் 3 & 4, புனர்பூசம், பூரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி
பெண் நட்சத்திரம் – பரணி
உத்தமம்
அசுவனி, கார்த்திகை 1, மிருகசீரிடம் 3 & 4, புனர்பூசம், ஆயிலியம், சித்திரை 3 & 4, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம், ரேவதி
மத்திமம்
கார்த்திகை 2 & 3 & 4 , திருவாதிரை, மகம் சுவாதி, விசாகம் 4, திருவோணம், சதயம்
பெண் நட்சத்திரம் – கார்த்திகை 1 பாதம்
உத்தமம்
அசுவனி, பரணி, திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், சதயம், உத்திரட்டாதி.
மத்திமம்
மிருகசீரிடம் 3 & 4, மகம், சித்திரை, கேட்டை, அவிட்டம், ரேவதி
பெண் நட்சத்திரம் – கார்த்திகை 2 3 4 பாதம்
உத்தமம்
அசுவனி, பரணி, பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், சதயம், உத்திரட்டாதி.
மத்திமம்
ரோகிணி பூரம் அஸ்தம் கேட்டை, அவிட்டம், ரேவதி
பெண் நட்சத்திரம் – ரோகிணி
உத்தமம்
பரணி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம் 4, பூசம், ஆயிலியம், உத்திரம் 1, சித்திரை 3 & 4, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி
மத்திமம்
அசுவனி புனர்பூசம் 1 2 3, பூசம், அனுஷம், உத்திரட்டாதி
நட்சத்திரம் – மிருகசீரிடம் 1 & 2 பாதம்
உத்தமம்
அசுவனி, கார்த்திகை, ரோகிணி, பூசம், உத்திரம் 1, அனுஷம், மூலம், உத்திராடம் 2 3 4, திருவோணம், சதயம் , உத்திரட்டாதி.
மத்திமம்
பரணி, புனர்பூசம் 4, ஆயிலியம் சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி
பெண் நட்சத்திரம் – மிருகசீரிடம் 3 & 4 பாதம்
உத்தமம்
அசுவனி, கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, உத்திரம், அஸ்தம், அனுஷம், மூலம், உத்திராடம் 1, திருவோணம், சதயம் , உத்திரட்டாதி.
மத்திமம்
பரணி, புனர்பூசம் 1 2 3, பூராடம் பூசம் சுவாதி, விசாகம், கேட்டை, பூரட்டாதி, ரேவதி
நட்சத்திரம் – திருவாதிரை
உத்தமம்
பரணி, மிருகசீரிடம், புனர்பூசம் 1 2 3, பூரம், சித்திரை 1 2, விசாகம் 4, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி
மத்திமம்
அசுவனி, கார்த்திகை, புனர்பூசம் 4, மகம், உத்திரம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி.
பெண் நட்சத்திரம் – புனர்பூசம் 1 2 3
உத்தமம்
அசுவனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம் , உத்திரட்டாதி.
மத்திமம்
ரோகிணி, பூசம், ஆயிலியம், அஸ்தம், சித்திரை 3 4, சுவாதி, கேட்டை, திருவோணம், ரேவதி
நட்சத்திரம் – புனர்பூசம் 4
உத்தமம்
அசுவனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை, சுவாதி அனுஷம், மூலம், அவிட்டம், சதயம் , உத்திரட்டாதி.
மத்திமம்
பரணி, பூசம், ஆயிலியம், அஸ்தம், பூராடம் கேட்டை, திருவோணம், ரேவதி.
நட்சத்திரம் – பூசம்
உத்தமம்
ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயிலியம், அஸ்தம், சுவாதி, விசாகம், சதயம் , பூரட்டாதி, ரேவதி
மத்திமம்
அசுவனி, கார்த்திகை, மிருகசீரிடம், உத்திரம், சித்திரை, மூலம், மகம், உத்திராடம் 2 3 4, அவிட்டம்.
பெண் நட்சத்திரம் – ஆயில்யம்
உத்தமம்
கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், சித்திரை, விசாகம் 1 2 3, அனுஷம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி.
மத்திமம்
பரணி, ரோகிணி, திருவாதிரை, உத்திரம் 2 3 4, அஸ்தம், உத்திராடம், திருவோணம், சதயம்.
நட்சத்திரம் – மகம்
உத்தமம்
பரணி, திருவாதிரை, பூசம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம் , உத்திரட்டாதி.
மத்திமம்
கார்த்திகை, பூரம், சித்திரை 3 4, அஸ்தம் அவிட்டம், பூரட்டாதி
பெண் நட்சத்திரம் – பூரம்
உத்தமம்
அசுவனி, கார்த்திகை, திருவாதிரை, மகம், உத்திரம் 1, சித்திரை 3 4, விசாகம், கேட்டை, உத்திராடம் 2 3 4, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி.
மத்திமம்
திருவாதிரை,சுவாதி, மூலம், திருவோணம், சதயம்
பெண் நட்சத்திரம் – உத்திரம் 1 பாதம்
உத்தமம்
அசுவனி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், பூரம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம் , உத்திரட்டாதி.
மத்திமம்
மிருகசீரிடம், ஆயிலியம், கேட்டை, மூலம், பூராடம், அவிட்டம், ரேவதி
நட்சத்திரம் – உத்திரம் 2 3 4 பாதம்
உத்தமம்
அசுவனி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், பூரம், அஸ்தம், அனுஷம், மூலம் பூராடம், சதயம் , உத்திரட்டாதி.
மத்திமம்
மிருகசீரிடம், ஆயிலியம், சுவாதி, கேட்டை, அவிட்டம் 3 4, ரேவதி
பெண் நட்சத்திரம் – அஸ்தம்
உத்தமம்
பரணி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம்,ஆயிலியம், பூரம், உத்திரம், சித்திரை 1 2, விசாகம் 4, கேட்டை, பூராடம், உத்திராடம் 1, அவிட்டம் 3 4, பூரட்டாதி, ரேவதி.
மத்திமம்
பூசம், மகம், அனுஷம் உத்திரட்டாதி.
பெண் நட்சத்திரம் – சித்திரை 1 & 2 பாதம்
உத்தமம்
அசுவனி, கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், அனுஷம், மூலம், சதயம்.
மத்திமம்
பரணி, புனர்பூசம், ஆயிலியம், பூரம், விசாகம், ரேவதி
பெண் நட்சத்திரம் – சித்திரை 3 & 4 பாதம்
உத்தமம்
அசுவனி, கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, மூலம், திருவோணம்.
மத்திமம்
பரணி, புனர்பூசம், ஆயிலியம், பூரம், விசாகம், கேட்டை, ரேவதி
பெண் நட்சத்திரம் – சுவாதி
உத்தமம்
பரணி, மிருகசீரிடம் 3 4, புனர்பூசம், ஆயிலியம், பூரம், கேட்டை, பூராடம், சித்திரை விசாகம் ரேவதி
மத்திமம்
கார்த்திகை, பூசம், மகம், உத்திரம், மூலம், உத்திராடம், அவிட்டம் 1 2, பூரட்டாதி, உத்திரட்டாதி.
பெண் நட்சத்திரம் – விசாகம் 1 2 3
உத்தமம்
அசுவனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம் 1 2.
மத்திமம்
பரணி ரோகிணி, ஆயிலியம், பூரம், அஸ்தம், அனுஷம், கேட்டை, அவிட்டம் 3 4, சதயம், ரேவதி
பெண் நட்சத்திரம் – விசாகம் 4
உத்தமம்
அசுவனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், சித்திரை, சுவாதி, அனுஷம் மூலம், அவிட்டம், சதயம்.
மத்திமம்
பரணி ரோகிணி, ஆயிலியம், பூரம், அஸ்தம், கேட்டை, ரேவதி.
பெண் நட்சத்திரம் – அனுஷம்
உத்தமம்
ரோகிணி, புனர்பூசம்,ஆயிலியம், அஸ்தம், சுவாதி, விசாகம், திருவோணம், சதயம் , பூரட்டாதி 1 2 3.
மத்திமம்
அசுவனி, கார்த்திகை, மிருகசீரிடம், மகம், உத்திரம், சித்திரை, கேட்டை, உத்திராடம் 2 3 4, பூரட்டாதி, ரேவதி
பெண் நட்சத்திரம் – கேட்டை
உத்தமம்
கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், அனுஷம், அவிட்டம்.
மத்திமம்
பரணி, ரோகிணி, பூரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம், திருவோணம், பூரட்டாதி, உத்திரட்டாதி.
பெண் நட்சத்திரம் – மூலம்
உத்தமம்
திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, சதயம்.
மத்திமம்
மிருகசீரிடம் 3 4, புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், பூராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி.
பெண் நட்சத்திரம் – பூராடம்
உத்தமம்
மிருகசீரிடம், புனர்பூசம் 1 2 3, மகம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம் 1, பூரட்டாதி, ரேவதி.
மத்திமம்
திருவாதிரை, புனர்பூசம் 4, ஆயிலியம், அஸ்தம், சுவாதி, விசாகம், உத்திராடம் 2 3 4, திருவோணம், அவிட்டம்.
பெண் நட்சத்திரம் – உத்திராடம் 1 பாதம்
உத்தமம்
திருவாதிரை, பூசம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், பூராடம், சதயம், உத்திரட்டாதி.
மத்திமம்
அசுவனி, பரணி, மிருகசீரிடம், ஆயிலியம், கேட்டை, திருவோணம், அவிட்டம், ரேவதி
பெண் நட்சத்திரம் – உத்திராடம் 2 3 4 பாதம்
உத்தமம்
அசுவனி, பரணி, பூசம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி.
மத்திமம்
ரோகிணி, ஆயிலியம், கேட்டை, அவிட்டம், ரேவதி
பெண் நட்சத்திரம் – திருவோணம்
உத்தமம்
பரணி, மிருகசீரிடம், புனர்பூசம், ஆயிலியம், உத்திரம் 2 3 4, சித்திரை, பூரம், விசாகம், கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி
மத்திமம்
மகம், பூரம், உத்திரம் 1, அனுஷம், மூலம், உத்திரட்டாதி
பெண் நட்சத்திரம் – அவிட்டம் 1 & 2
உத்தமம்
அசுவினி, கார்த்திகை பூசம் உத்திரம் 2 3 4, அஸ்தம், சுவாதி அனுஷம், மூலம், உத்ராடம், திருவோணம், சதயம்.
மத்திமம்
உத்திரட்டாதி, பூராடம், விசாகம், ஆயில்யம், புனர்பூசம், கார்த்திகை 2 3 4, கேட்டை, உத்திரம், மகம்.
பெண் நட்சத்திரம் – அவிட்டம் 3 & 4
உத்தமம்
கார்த்திகை பூசம் மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி அனுஷம், மூலம், உத்ராடம், திருவோணம், சதயம்.
மத்திமம்
அஸ்வினி, ரோகினி, பூராடம், விசாகம், பூரம், ஆயில்யம், திருவாதிரை, புனர்பூசம் 4, கேட்டை, உத்திரம், மகம். உத்திரட்டாதி.
பெண் நட்சத்திரம் – சதயம்
உத்தமம்
மிருகசீரிடம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம்.
மத்திமம்
அசுவினி புனர்பூசம், பூசம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், பூரட்டாதி, ரேவதி.
பெண் நட்சத்திரம் நட்சத்திரம் – பூரட்டாதி 1, 2 & 3 பாதம்
உத்தமம்
அசுவனி, மிருகசீரிடம் 1 & 2, பூசம், மகம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம்.
மத்திமம்
ஆயில்யம், அஸ்தம், அனுஷம், கேட்டை, பூராடம், திருவோணம், உத்திரட்டாதி.
பெண் நட்சத்திரம் – பூரட்டாதி 4 பாதம்
உத்தமம்
மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை 1 & 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி.
மத்திமம்
சுவாதி, பூசம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம்.
பெண் நட்சத்திரம் நட்சத்திரம் – உத்திரட்டாதி
உத்தமம்
ரோகினி, திருவாதிரை, புனர்பூசம் 2 3, அஸ்தம், கேட்டை, திருவோணம், பூரட்டாதி, சதயம், ரேவதி.
மத்திமம்
அவிட்டம், உத்திராடம், மூலம், சுவாதி, ஆயில்யம், உத்திரம் 3 & 4, புனர்பூசம் 4, கார்த்திகை 2 3 4.
பெண் நட்சத்திரம் – ரேவதி
உத்தமம்
கார்த்திகை 2 3 4, மிருகசீரிடம், புனர்பூசம் 1 2 3, உத்திரம் 2 3 4, சித்திரை 1 2, விசாகம், அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி.
மத்திமம்
கார்த்திகை 1, ரோகினி, புனர்பூசம் 4, பூராடம், பூசம், அஸ்தம், விசாகம், திருவோணம், சதயம்.
சேரக்கூடாத நட்சத்திரங்கள்
மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்து பெண் நட்சத்திரத்திற்கு ஏற்ப பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள். குறிப்பிட்டுள்ள உத்தம மற்றும் மத்திம நட்சத்திரங்களை தவிர மற்ற நட்சத்திரங்கள் சேரக்கூடாத அல்லது பொருந்தாத நட்சத்திரங்கள் ஆகும்.
நம் முன்னோர்கள் ஏக நட்சத்திரத்தில் திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது பெண் ஜாதகத்திற்கு ஆண் ஜாதகத்திற்கும் தசவித பொருத்தங்கள் பார்த்து பொருத்தம் செய்கின்றனர். இதில் ஏக நட்சத்திரங்கள் வந்தால் பொருத்தம் செய்வதில்லை ஏனெனில், அவர்களுக்கு ஒரே திசா அல்லது புத்தி ஏற்படும் மற்றும் ஒரே ரஜ்ஜு வாக இருப்பார்கள். ஆதலால் பொருத்தம் செய்வதில்லைல். மேலும், ஒரே ராசி ஒரே லக்னம் திருமணம் செய்யலாமா? என்று பார்ப்போம்.
ஏக நட்சத்திரம் பொருத்தம் என்றால் என்ன?
ஏக நட்சத்திரம் என்பது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருப்பது ஆகும். உதாரணமாக பெண் நட்சத்திரம் ஆயில்யம் என்று வைத்துக்கொள்வோம். ஆண் நட்சத்திரமும் ஆயில்யம் என்று இருந்தால் ஏக நட்சத்திரம் ஆகும். இது போன்று பொருத்தம் செய்யக் கூடாது. ஜோதிடர்கள் இதனை பொருத்தம் செய்ய மாட்டார்கள்.
இருப்பினும் நம் முன்னோர்கள் பல ஆய்வுகளின் அடிப்படையில் சில நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரம் என்றாலும் பொருத்தம் சேர்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். அவைகளை பார்ப்போம்.
உத்தம பலன் உள்ள ஏக நட்சத்திரங்கள்
ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், திருவோணம், இந்த 6 நட்சத்திரங்களும் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் உத்தமம் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். இதனை பொருத்தி திருமணம் செய்யலாம்
மத்திம பலன் உள்ள ஏக நட்சத்திரங்கள்
அஸ்வினி, கார்த்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம், இந்த 10 நட்சத்திரங்களும் மத்திமமான பொருத்தம் உள்ள நட்சத்திரங்கள் ஆகும். இவைகளை இணைக்கலாம் என்றும் முன்னோர்கள் கூறுகின்றனர்.
மற்ற நட்சத்திரங்கள் எதற்கும் ஏக நட்சத்திரம் பொருத்தம் இல்லை, தவிர்ப்பது நல்லது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2