Srirangam Ranganathar Temple ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அரங்கனை தரிசித்துள்ளீர்களா?...

Srirangam Ranganathar Temple “அறம், பொருள், இன்பம், வீடு” என்கிற நியதியை மனிதர்களுக்கு உருவாக்கியதே நம் முன்னோர்கள்தான். . பூலோகத்தில் இந்த நான்கையும் பெற உதவுபவர் “மகாவிஷ்ணுவான” ஸ்ரீ ரங்கநாதர்.

Update: 2024-02-09 17:30 GMT

Srirangam Ranganathar Temple

தமிழகத்தில் ஏராளமான திருத்தலங்கள் இருந்தாலும் ஒரு சில கோயில்கள் மிகவும் தொன்மை வாய்ந்தவை. அக்கால மன்னர்கள் ஆன்மீகத்துக்கு ஆற்றிய தொண்டின் நினைவாக தமிழகத்தில் பல கோயில்கள் இன்றளவில் அதனை பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

காவிரியாற்றங்கரையில் மிக நீண்ட நெடிய கோபுரத்தினை எங்கு பார்த்தாலும் தெரியும் வகையில் 1987 ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு இன்றளவில் கம்பீரமாக காட்சியளி்க்கிறது. இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த ராஜகோபுரத்தினை வடிவமைத்த பொறியாளர்கள் இதன் நிழல் எந்த திசையிலும் விழாத வகையில் அமைத்திருப்பதுதான் இதன் மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.

இறைவனாகப்பட்டவன் மனிதர்களாக படைத்து அவர்கள் வாழ்வின் பல்வேறு அனுபவங்களை உணரவேண்டும். பின்னர் அவர்கள் மீண்டும் மறு பிறவியில்லாத மோட்சத்தினை அடையவேண்டும் என்ற நோக்கில் படைத்தானா? என்றே தோன்றுகிறது.

நமது முன்னோர்கள் எதை செய்வித்தாலும் அதில் பொருள் இருக்கும். எத்தனை நாகரிகங்கள் வந்தாலும் அந்த முன்னோர்சொல்லை ஒரு சிலர் இன்றளவிலும் கடைப்பிடித்துவருவதே அவர்களுக்கான சிறப்பு. “அறம், பொருள், இன்பம், வீடு” என்கிற நியதியை மனிதர்களுக்கு உருவாக்கியதே நம் முன்னோர்கள்தான். . பூலோகத்தில் இந்த நான்கையும் பெற உதவுபவர் “மகாவிஷ்ணுவான” ஸ்ரீ ரங்கநாதர். அவரின் சிறப்புகளையும் அவர் வீற்றிருக்கும் இடமாகிய ஸ்ரீரங்கத்தின் சிறப்புகளைப்பற்றியும், இக்கோயிலின் தலவரலாறு பற்றியும் பார்க்கலாம் வாங்க...

திருவரங்கம் 

“அரங்கம்” என்றால் “தீவு” என தமிழில் ஒரு பொருள் உண்டு. ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள்” ரங்கநாயகர்” எனவும் தாயார் “ரங்கநாயகி” எனவும் அழைக்கப்படுகிறார்கள். புராணங்களின் படி ராவணன் வதத்திற்கு பின்பு அயோத்தியின் மன்னனாக “ஸ்ரீராமர்” முடிசூடும் விழாவிற்கு வருகை தந்த விபீஷணனுக்கு, ஸ்ரீ நாராயணனின் சிறிய சிலையை ராமர் பரிசளித்தார். அதை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு திரும்பும் வழியில் இறைவழிபாடு செய்ய விரும்பிய விபீஷணன், இடையன் உருவில் வந்த பிள்ளையாரிடம் நாராயணனனின் சிலையை கொடுத்து, அதை எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக்கூடாது என சொல்லிவிட்டு காவேரி நதி க்கு சென்றான்.

- ஆனால் எவ்வளவு நேரம் கையிலேயே வைத்திருப்பது, என எண்ணிய பிள்ளையார் விபிஷணன் வருவதற்குள் அச்சிலையை கீழே வைத்துவிட்டார். . பிறகு வந்த விபீஷணன் நாராயணனின் சிலை கீழே வைக்கப்பட்டதால் அச்சிலையானது மிகப்பெரிய அளவில் உருமாறி இருந்ததையும் கண்டான். பின்னர் அதனை அங்கிருந்து அகற்றுவதற்கு எவ்வளவோ முயற்சித்தான். அப்போது திடீரென அசரீரீ தோன்றியதை விபிஷணன் உணர்ந்தான். அது நாராயணன் அசரீரியாக தான் இங்கேயே இருக்க விரும்புவதாக தெரிவித்தார். . ஆனால் விபீஷணனுக்கு வாக்களித்தது போலவே அவனது இலங்கை நாடு இருக்கும் தெற்கு திசையை பார்த்தவாறே தான் வீற்றிருப்பதாகவும் கூறினார். அக்காலகட்டத்தில் இப்பகுதியை ஆண்ட “தர்ம வர்ம சோழன்” ரங்கநாதருக்கு கோயில் கட்டினான்.

வெள்ளத்தில் மூழ்கிய கோயில்

சில காலங்களில் காவிரி நதியில் மிகப்பெரிய வெள்ளம் வந்ததால் அக்கோவிலானது ஆற்றுமணலில் மூழ்கி புதையுண்டது. பின் ஆட்சிக்கு வந்த சோழ மன்னன் ஒருவன், புதையுண்ட ரங்கநாதரின் கோவில் எங்கிருக்கிறது என்பதை ஆற்றுப்பகுதிக்குதினந்தோறும் வந்து தேடலானான். ரங்கநாதர் ஆலயம் மணலில் புதைந்து போவதற்கு முன்பு ரங்கநாதருக்கு செய்யப்பட்ட பூஜையின் போது வேதியர்கள் ஓதிய மந்திரங்களை, அக்கோவில் வளாகத்திலிருந்த மரத்தில் வசித்த கிளி ஒன்று நன்கு கவனித்ததால் அதனையே மீண்டும் மீண்டும் உச்சரித்துக்கொண்டேயிருந்ததை அம்மன்னன் கண்டான். பின்னர் அதனை வைத்து புதையுண்ட கோயில் இருக்கும்இடத்தினை கண்டுபிடித்து மீண்டும் புனரமைத்து கோயிலினை சிறப்பாக கட்டியதால் அம்மன்னன் “கிளிச்சோழன்” என அழைக்கப்பட்டான். -

தல வரலாறு

5ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது. “சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள்” என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களால் இந்த ரங்கநாதர் கோவிலானது சூறையாடப்பட்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்பரப்பளவில் மிக்பெரிய கோயில் .இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே மிக உயரமான கோபுரத்தினைக் கொண்ட கோயில் .கடந்த 1987 ம் ஆண்டில் இக்கோயிலின் ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டது.

. வைணவர்களின் “108 திவ்ய தேசங்களில்” முதன்மையானது இந்த ஸ்ரீரங்கம் கோவில். ஆழ்வார்கள் அனைவராலும் பாடல் பெற்ற கோவிலா க இது உள்ளது. ஸ்ரீவில்லிபுத்துாரில் குடிகொண்டுள்ள ஆழ்வார்களில் பெண்ணானவளான

“ஆண்டாள்” அரங்கனுள் ஐக்கியமானாள்.

” தமிழை முதன்மையாக கொண்டு கோவில் சம்பிரதாயங்களை கடைபிடிக்குமாறு செய்து நிர்வாகத்தை சீர் செய்தவரும்,வைணவசம்பிரதாயத்தை உயிர்ப்பிக்க வந்தவரும் ஆதிசேடனின் அவதாரமாக கருதப்படுபவருமானவர் ராமானுஜர் ஸ்ரீ ராமானுஜரது திருவுடல் 900 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சை கற்பூரம் சாற்றி பாதுகாக்கப்படுகிறது.

இந்த கோயிலில்தான் நரசிம்ம மூர்த்தியாலேயே பாரட்டு பெற்ற கவிச்சக்கரவர்த்தி கம்பன் கம்பராமாயணத்தை அரங்கேற்றினார்.

இந்த கோவிலின் இறைவனான ரங்கன் மீது தீவிர பக்தி கொண்ட டில்லி சுல்தானின் மகள் இக்கோவிலுக்கு வந்து ரங்கனை தரிசித்த போது, அங்கேயே தன் உடலை நீத்து ரங்கனில் ஐக்கியமானாள். எனவே அவள் “துலுக்க நாச்சியார்” என அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறாள்.

Srirangam Ranganathar Temple


சுக்கிரன் பரிகார தலம்

இறைவனான ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீதேவியாகிய லட்சுமி மற்றும் ஆண்டாளுடன் காட்சியளிக்கிறார். நவகிரகங்களில் “சுக்கிரனின்” அம்சம் பொருந்தியவராக இவர் கருதப்படுவதால் “சுக்கிரன் பரிகார தலமாகவும்” இக்கோயிலானது விளங்கி வருகிறது.

Srirangam Ranganathar Temple


இங்கிருக்கும் “சக்ரத்தாழ்வார்” சந்நிதியில் வழிபட்டால் நம்மை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள், துரதிர்ஷ்டங்கள் மற்றும் நோய் நொடிகள் நீங்குவதாக கூறப்படுகிறது. இங்கு வழிபடுவதால் ஒருவருக்கு வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது அனுபவம் வாய்ந்த பக்தர்களின் நம்பிக்கை.

சொர்க்க வாசல் திறப்பு

மார்கழி மாதம் என்றாலே தெய்வீக மாதம் என்று கூட சொல்லலாம். சிவன் கோயில்களில் திருவெம்பாவையும், வைணவ கோயில்களில் திருப்பாவையும் அதிகாலை பள்ளியெழுச்சியின்போது பாடப்பெறும். அந்த வகையில் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி” தினத்தில் இக்கோவிலில் “சொர்க்க வாசல்” திறந்து, சொர்க்க வாசல் வழியாக ரங்கநாதர் பட்டுடை உடுத்தி வரும் சம்பிரதாய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் மாநிலம் முழுவதிலும் மட்டுமல்லாமல் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் கலந்துகொள்வதும் அரங்கநாதரின் சிறப்பு என சொல்லலாம்.மேலும் மார்கழி மாதத்தில் பகல் பத்து, ராப்பத்து விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகி றது.

ஐ. நா. அங்கீகாரம்

“அருள்மிகு திருவரங்கம் ரங்கநாதர் கோவில்” திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. ரயில் மார்க்கமாகவும், சாலை மார்க்கமாகவும் இக்கோவிலை அடையலாம். திருச்சியிலிருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. கோவில் நடை திறந்திருக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மதியம் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை .மிக சிறந்த சிற்பங்களை கொண்ட இக்கோவில் ஐ .நா. சபையின் “யுனெஸ்கோ” அமைப்பால், பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News