வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் சிவன் பாதமே... படியுங்களேன்...
Shiva Quotes in Tamil-இறைபக்தி என்பது அவரவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. ஒருசிலர் சிவபக்தனாக இருப்பர். ஒருசிலர்முருக பக்தனாக இருப்பர். அவரவர்களின் சொந்த விருப்பமானது பக்தி.... சிவனின் பெருமையான வாசகங்களைப் பார்ப்போம்...
Shiva Quotes in Tamil-சைவ மரபில், சிவம் சக்தி ஆகிய இரண்டும், ஒருபெருமுழுமையின், ஒன்றிலொன்று இன்றியமையாதாஇரு அம்சங்கள். அவற்றைப் பரமசிவம், ஆதிசக்தி என நோக்கும் சைவர்கள், அந்த இரு பேராற்றல்களின் திருவிளையாடல்களாகவே புராணக்கதைகளை நோக்குகின்றனர். தக்கனின் தவத்தால் அவனுக்கு மகளாகப் பிறக்கும், ஆதிசக்தி, "சதிதேவி" என்று அறியப்படுகிறாள். தக்கனின் அனுமதியின்றி சதி சிவனை மணந்ததால் வெகுண்ட தக்கன், அவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் யாகம் செய்கின்றான். அங்கு அழைப்பின்றி வந்த சதிதேவியிடம், தக்கன் ஈசனை இழித்துப்பேசுவதால், சதி வேள்வித்தீயில் வீழ்ந்து மறைய, ஆங்காரமுற்ற ஈசனின் திருமுடியிலிருந்து வீரபத்திரர் தோன்றி, யாகத்தை அழிக்கிறார்
. சதியின் உடல் யாககுண்டத்தில் கிடந்ததாகவும், அதை ஆற்றாமையுடன் ஈசன் தூக்கிச் சென்றபோது, அவற்றை திருமால் ஆழியால் சிதைக்க, அவை வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்களானதாகவும், இக்கதை செல்கின்றது. பின், பர்வதராசன் மைனாவதியின் தவத்துக்கிரங்கி, சக்தி மீண்டும் பார்வதியாக அவதரிக்கிறாள். கடுந்தவமிருந்து ஈசனைக் கணவனாக அடையும் உமையவள், பின் பல அசுரர்களை அழித்து, தேவர் துயர் தீர்த்தும், பிள்ளையார், முருகன் ஆகியோரைப் படைத்தும், ஈசன் தேவியாக வீற்றிருக்கிறாள்.
சிவனை சிவம் என்றும், சிவப்பரம்பொருள் என்றும் சைவர்கள் அழைக்கின்றனர். சிவன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களை (ஆணவம்,கன்மம்,மாயையும்) போக்கி வீடுபேறு அருளுகிறார். தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கைய உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங்களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என எட்டுவகை குணங்களையும் சிவன் கொண்டுள்ளார் என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர் என்றெல்லாம் சித்தாந்தம் சிவனை வரையறுக்கின்றது.
நடராச உருவத்தில் அவர் ஐந்தொழில் ஆற்றுவது, குறியீட்டு ரீதியில் பின்வருமாறு விளக்கப்படுவதுண்டு
ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றலைக் குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்)
ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலைக் குறிக்கும்
இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலைக் குறிக்கும்
இன்னொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலைக் குறிக்கும்
தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலைக் குறிக்கும்.
சிவ வடிவங்கள்
சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார். அருவத்திருமேனி சத்தர் என்றும், அருவுருவத்திருமேனி பரம்பொருள் என்றும், உருவத்திருமேனி பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறது. அருவுருவமாக லிங்கமும், மகேசுவரமூர்த்தங்கள் மற்றும் சிவஉருவத்திருமேனிகள் ஆகியவை உருவத்திருமேனியாகவும் சைவர்களால் வழிபடப்படுகின்றன.
தடத்தநிலையில் ஈசன் கொள்ளும், அறுபத்து நான்கு வடிவங்கள் ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிறப்பான இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சிவபெருமானின் பெருமையான வாசகங்கள்....
படைத்தவனுக்கு தெரியும் உன்னை எவ்வளவு பாரம் சுமக்க முடியும் என்று.. தளராதே கைவிட மாட்டார்!! ஓம் நமச்சிவாய!!
என் உயிரின் தேடல் என்றைக்கும் சிவன் ஒன்றே!! அதை அடைந்திடவே அன்றாடம் ஓதுகிறேன் ஓம் நமச்சிவாய என்றே!!
புண்ணியங்கள் அழிவதும் இல்லை பாவங்கள் கழிவதும் இல்லை.. நடப்பது நடந்தே தீரும்!! ஓம் நமச்சிவாய!!
பிறக்க வைப்பதும் அவனே.. சிறக்க வைப்பதும் அவனே.. துறக்க வைப்பதும் அவனே.. பிறப்பு அறுப்பதும் அவனே.. மறத்தல் ஆகாது மனமே.. மறையோனை நினை தினமே
உன் உள்ளத்திலும் இல்லத்திலும் நான் தான் இருக்கிறேன்!! நான் உனக்கு கொடுத்த வழியின் இலக்கு தெரியவில்லை என்றால், அந்த வழியில் விளக்கு எத்தனை எரிந்தாலும் பாதை அனைத்தும் இருட்டாகவே தெரியும்..
நான் வாழ்ந்தது கொஞ்ச நாட்கள் வாழப்போகும் எஞ்சிய நாட்கள் யாரையும் விஞ்சிய வாழ்க்கை வாழ்வை தராவிட்டாலும் மிஞ்சிய நாட்கள் யாரிடமும் கெஞ்சாமல் யாருக்கும் அஞ்சாமல் என்னை வாழ வை என்னப்பனே சிவனே!!
இந்த சுவாசம் கூட எனதல்ல.. நீ இட்ட யாகமே என்று அறிந்தேன் இப்பிறவியில்.. என் ஈசனே!!
பழு வாழ்வு தரும் பனிமலையானின் பாதம் தொட்டு வணங்குவோம்!! ஓம் நமச்சிவாய!!
நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும்!! இருட்டில் நடந்தாலும் இமயம் வரை செல்லலாம் ஈசன் துணையோடு.. ஓம் நமச்சிவாய!!
விதி என்னை காட்டுக்குள் தள்ளினாலும் அங்கும் காவல் ஐயன் என் ஈசனே..!! விதியே பயப்படும் என் ஐயன் ஈசனை கண்டால்!!
பொன் வேண்டாம்.. பொருள் வேண்டாம்.. சிவமே உன் அருள் மட்டும் போதும் ஐயனே!! ஓம் நமச்சிவாய!!
நான் உனக்கு அளிக்கும் சோதனைகள் நீ அழுதுபுலம்புவதற்காக அல்ல.. நீ புதுப் பொலிவுடன் மாறுவதற்காக மட்டுமே ஆகும்!!
நீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தமை பாசமுடனே காக்கும் ஈசனே.. எங்கள் நேசனே.. கயிலை மலை வாசனே.. நாளும் போற்றுவோம் நாதனின் திருநாமம் நமச்சிவாயவே!!
நீ கீழே விழும்போது விதையாக விழு.. நீ எழும்போது மரமாக எழு!! உன்னை வீழ்த்த நினைத்தவர்களும் உன் நிழலில் இளைப்பாறட்டும்!!
எத்தனை சோகங்கள் வந்தாலும் இதுவும் கடந்து போகும் என நினைத்து என்னை மனதில் வை.. நான் இருக்கிறேன்!! ஓம் நமச்சிவாய!!
என் தாயும் எனக்குள் தந்தையும் நீ.. ஓம் நமச்சிவாய..!!
கலங்கி தவிக்கும நான் நின் கரம் பற்றி கரையேறும் காலம் எக்காலம்.. எனை காக்கும் என் காவலனே!!
அவன் கொடுக்க விரும்புவதை யாராலும் தடுக்க முடியாது.. அவன் விரும்பாததை எவராலும் கொடுக்க முடியாது..!! ஓம் நமச்சிவாய!!.
வாழ்ந்தாலும் சிவன் பாதமே.. வீழ்ந்தாலும் சிவன் பாதமே!!
என்னை அழ வைக்கவும் விழ வைக்கவும் ஆயிரம் பேர் இருந்தாலும் வாழ வைக்க நீ இருக்கிறாய் ஈசனே!!
விதி என்னும் வினையால் வீழ்ந்தாலும் மதி சிவத்தால் எழுந்திடு!! ஓம் நமச்சிவாய!!
உன்னை நினையாமல் ஒரு நொடியும் கழிவதில்லை.. உன்னை வணங்காமல் ஒருபொழுதும் விடிவதில்லை.. உன் மேல் அன்பை பொழிவதற்கே பிறப்பெடுத்தேன்!! ஓம் நமச்சிவாய நம!! ஈசன் அடிமை நான்!!
தேடி தேடி திரிந்தேன் உண்மை உறவை.. இறுதியில் நின்றனவன் என் உள்ளத்தில் நீங்காது என்றும் இந்த பந்தம் ஈசன்!!!
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே!!
என் ஐயன் ஈசனை நம்பியோருக்கு சோதனை உண்டு ஆனால் தோல்வி இல்லை.. சிவனிடம் கையேந்தியவர் வேறு எவனிடமும் கை ஏந்த அவசியம் இருக்காது!!
இமைக்கும் என் கண்கள் உன்னை பார்க்காமல் இருக்கலாம்.. ஆனால் துடிக்கும் என் இதயம் உன்னை எப்போதும் மறப்பதில்லை சிவமே..!! மறந்தால் என் இதயம் துடிப்பதில்லை.. சீவனாய் என்னைஆளும் சிவனே!!
இன்னல்கள் பல என்னைத் தொடரினும் உன்னை அனுதினமும் உள்ளம் உருகிட வணங்கிடுவேன் என் ஈசனே!!
நினைப்பதும் நீயே.. நினைக்க வைப்பதும் நீயே.. செயலாக்குவதும் நீயே.. நின் ஆழ்ந்த கருணையினால்.. நற்றுணையாவது நமச்சிவாயவே!!
வித்தையிலும் வித்தை கண்டேன்.. துன்பத்திலு
ம் இன்பம் கண்டேன்.. சொந்தமென உன்னை கொண்டேன்.. உணர்த்தி சேவடிகள் போற்றி நின்றேன்.. சிவனே.. சிவனே.. சிவனே..
பள்ளத்தில் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தாய் வெள்ளத்தில் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தாய்.. எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்.. எதனில் கரைந்தால் முக்தி அளிப்பாய்.. சக்தியின் நாயகனே சற்றே உரைப்பாய்!!
மகிழ்வை தருவதல்ல சிவம்.. கவலைகளை தாங்க மன தைரியம் தருவதே சிவம்!!
உன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் நான் பொறுப்பு.. உன் ஆசைக்கும் உன் வாழ்க்கைக்கும் நீயே பொறுப்பு!! ஓம் நமச்சிவாய!!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2