இன்று ஷடாஷ்டக யோகம்: கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

சனி மற்றும் செவ்வாய் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என சீனிவாச சித்தர் கூறி உள்ளார்.

Update: 2023-05-10 13:35 GMT

பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர்

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகலாம். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில், இன்று மிகவும் மோசமான ஷடாஷ்டக யோகம் உருவாகி உள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் கூறியதாவது:

செவ்வாய் மற்றும் சனியால் உருவாகி உள்ளது ஷடாஷ்டக யோகம். நவகிரகங்களில் தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் பலவீனமான ராசியான கடக ராசிக்குள் நுழைகிறார். இப்படி செவ்வாய் கடக ராசிக்குள் நுழையும் போது, சனி-செவ்வாயால் 6-க்கு 8 என்னும் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது.

செவ்வாய் இந்த கடக ராசியில் ஜூலை 1 ஆம் தேதி வரை இருப்பார். இதனால் இந்த ஷடாஷ்டக யோகத்தின் தாக்கம் ஜூலை மாதம் வரை இருக்கும். சனி செவ்வாயால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான மற்றும் பல பிரச்சனைகளை தரக்கூடும். இப்போது எந்த ராசிக்காரர்கள் ஷடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது மிகவும் தீங்கு விளைவிக்கும். ஏனென்றால் செவ்வாய் மிதுன ராசியில் 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார் .இதனால் இக்காலத்தில் பண இழப்பிற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். பேசும் போது வார்த்தைகளை கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதுவே பல பிரச்சனைகளை வரவழைத்துவிடும். முதலீடு செய்ய நினைத்தால், அதை தவிர்ப்பது நல்லது. இந்த யோகத்தால் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சொத்து பிரச்சனைகளும் வரலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சிம்மம்

ஷடாஷ்டக யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் 12 ஆம் வீட்டில் இருப்பதால், செலவுகள் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரிடும். தேவையில்லாத பிரச்சனைகளை இக்காலத்தில் சந்திக்க நேரிடும். இக்கால கட்டத்தில் தேவையில்லாமல் பயணம் செய்ய வேண்டியிருக்கும். மன உளைச்சல் அதிகரிக்கும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதே சமயம் உங்கள் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கும் ஷடாஷ்டக யோகமானது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் எட்டாவது வீட்டிற்கு செவ்வாய் செல்வதால், இக்காலத்தில் எதிரிகளிடம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உடல்நல பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளளது. அதிலும் ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம் என சீனிவாச சித்தர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News