மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.;

Update: 2023-11-16 03:54 GMT

 சபரிமலை கோவில் (கோப்பு படம்)

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் கேரளாவில் ஐயப்பனுக்கு அச்சன்கோவில்,ஆரியங்காவு,குளத்துப்புழா,தர்ம சாஸ்தா கோவில், சபரிமலை மற்றும் காந்த மலை என ஆறு கோவில்கள் உள்ளது. இதில் பிரசித்தி பெற்றது சபரிமலை ஆகும்.

இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை முதல் மாதம் மண்டல பூஜை மற்றும் மகர பூஜைக்காக கோயில் நடை திறப்பது வழக்கம். இந்தக் காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் 41 நாட்கள் பக்தர்கள் விரதம் மேற்கொண்டு ஐயப்பனை தரிசிக்க வருகை புரிகின்றனர்.அவ்வாறு வருகை புரியும் பக்தர்களுக்கு கேரளா அரசு அடிப்படை தேவைகளான பொது சுகாதாரம்,குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருகின்றது. தற்போது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து பணிகளையும் கேரள அரசு செய்து வருகிறது.

இந்நிலையில் நடப்பாண்டில் கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் நாள்தோறும் அதிகாலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். 41 நாட்கள் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும்.

டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு புகழ்பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News