இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல , மகர விளக்கு பூஜைகளை தவிர தமிழ் மாதம் பிறக்கும் முதல் நாளன்று மாதம் தோறும் திறக்கப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளது. தமிழ் மாத பிறப்பை ஒட்டி முதல் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறாது, இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு பின் இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.
வருகிற 21ஆம் தேதி வரை ஆடி மாத சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெற உள்ளது.